காட்சி பொருளாக மாறிய குழந்தைகள் மையம்

நடுவீரப்பட்டு: குழந்தைகள் மைய கட்டடத்தினை திறக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் ஊராட்சி, கொட்டிக்கோணாங்குப்பத்தில் இருந்த குழந்தைகள் மைய கட்டடம் பழுதடைந்ததால், குழந்தைகள் மற்றும் ஊழியர்கள் அவதியடைந்தனர்.

இதனால் கடந்த கடந்த 2024–2025 ம் ஆண்டு என்.எல்.சி.,சி.எஸ்.ஆர்.,திட்டத்தின் கீழ்  ரூ.15.50 லட்சம் மதிப்பில் புதிய குழந்தைகள் மைய கட்டடம் கட்டப்பட்டது.

இந்த கட்டடம் கட்டப்பட்டு ஓராண்டாகியும் திறக்கப்படாமல் மூடியே உள்ளது. இதனால் இந்த மையத்தில் படிக்கும் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ,மைய பணியாளர்கள் கொஞ்சிக்குப்பத்தில் உள்ள ஊராட்சி நுாலக கட்டடத்தில் குழந்தைகள் மையத்தினை நடத்தி வருகின்றனர். இதனால் குழந்தைகள் வெகு துாரத்திற்கு செல்ல வேண்டிய நிலையால் அவதியடைந்து வருகின்றனர். 

ஆகையால் மாவட்ட நிர்வாகம் கட்டி முடிக்கப்பட்ட குழந்தைகள் மைய கட்டடத்தினை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement