'தினமலர்' நாளிதழ் ஏற்பாடில் போதை பொருள் தடுப்பு பேரணி

குன்றத்துார்: போதை இல்லாத சமுதாயத்தை வலியுறுத்தி, 'தினமலர்' நாளிதழ் சார்பில் , குன்றத்துார் மேத்தா நகரில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

மொபைல் போனில் மூழ்கி கிடக்கும் குழந்தைகளை, 'ரீல்' உலகத்திலிருந்து 'ரியல்' உலகத்திற்கு அழைத்து வரும் நோக்கில், 'தினமலர்' நாளிதழ் சார்பாக், 'ரீலா... ரியலா' எனும் நிகழ்ச்சி, குன்றத்துார், மேத்தா நகரில், இரு நாட்களாக நடந்தது.

இதன் ஒரு பகுதியாக, போதை இல்லாத சமுதாயம் என்ற கருப்பெருளை மையமாக வைத்து, ஜூன் 6 கோலப்போட்டி நடத்தப்பட்டுது.

ஜூன் 7, போதை பொருள் எதிர்ப்பு குறித்து, மேத்தா நகர் மக்கள் அப்பகுதியில் பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், சிறுவர்களின் வாசிப்பு திறனை ஊக்குவிக்கும் வகையில், போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன.

Advertisement