பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையவில்லை; கடும் நடவடிக்கை எடுக்க அண்ணாமலை வலியுறுத்தல்
சென்னை: திமுக ஆட்சியில் நடைபெற்ற பெண்களுக்கு எதிரான குற்றங்கள், தற்போதைய ஆட்சியிலும் குறையவில்லை. குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை: தவெக ஆலந்தூர் வடக்கு பகுதிச் செயலாளர் வேம்புலி என்ற நபர், கணவரை இழந்து தனியே வசிக்கும் பெண்ணின் வீடு புகுந்து, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ள செய்தி, மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
பெண்களின் பாதுகாப்பு குறித்து தவெக தலைவர் முதல்வர் விஜய் கூறி வரும், வாக்குறுதிகளுக்கு நேர்மாறாக உண்மை நிலை இருப்பது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.
திமுக ஆட்சியில் நடைபெற்ற பெண்களுக்கு எதிரான குற்றங்கள், தற்போதைய ஆட்சியிலும் குறையவில்லை. இது போன்ற கடுமையான குற்றங்களில் ஈடுபடும் தைரியம், இவர்களுக்கு எங்கிருந்து வருகிறது?
சமூக விரோதச் செயல்பாடுகளுக்கு, அரசியல் அடையாளம் பாதுகாப்பாக இருக்கக்கூடாது என்பதை, முதல்வர் உறுதி செய்யவேண்டும். குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (2)
Krishna - bangalore,இந்தியா
12 ஜூன்,2026 - 22:04 Report Abuse
SACK& PUNISH All these CaseNews VotePower Hungry DreadedSaintly ConspiratorMAFIAs& Vested False Complainant Gangs for Gravely MISUSING LAWS/Powers 0
0
Reply
Vel1954 Palani - ,இந்தியா
12 ஜூன்,2026 - 15:59 Report Abuse
அரசு வாயால் வட சுட வேண்டாம். செயலில் இருக்கணும். 0
0
Reply
மேலும்
-
சொல்கிறார்கள் –––––––––– சேர்ந்து வாழாவிட்டாலும் சிறந்த பெற்றோராக இருக்கணும்!
-
சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு
-
அதிக மழைப்பொழிவு எங்கே?
-
கோவில் நில ஆக்கிரமிப்பு கும்பல் அரசுக்கு எதிராக பிரசாரம் : முறியடித்து நிலத்தை மீட்க பக்தர்கள் வலியுறுத்தல்
-
முதல்வர் விஜய்க்கு பிரதமர் மோடி, ராகுல், ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து
-
மிரட்டும் எதிரிகள் : பெண் அமைச்சர் ஆவேசம்
Advertisement
Advertisement