ரூ.134 கோடி சிறப்பு தொகுப்பு ஏமாற்று அறிவிப்பு; இபிஎஸ் விமர்சனம்
சென்னை: குறுவை சாகுபடி மேட்டூர் அணையில் இருந்து காவிரி நீர் திறக்காத பொய்க்கால் குதிரை அரசு, ரூ. 134 கோடிக்கு சிறப்பு தொகுப்பு என்ற ஏமாற்று அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகஅதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் விமர்சித்துள்ளார்.
அவரது அறிக்கை;ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12 அன்று திறக்கப்படும் மேட்டூர் அணை நீர், இவ்வாண்டு இன்றைய தினம் திறக்கப்படாததால் விவசாயிகள் பெரும் அதிர்ச்சிக்கும் கவலைக்கும் ஆளாக்கியுள்ளது. குறுவை சாகுபடி மேட்டூர் அணையில் இருந்து காவிரி நீர்த் திறப்பை பெரிதும் நம்பி இருப்பதால், இந்த நீர் வெளியீடு என்பது மிகவும் முக்கியமானது.
ஏற்கனவே விவசாயப் பயிர்க் கடன் என்ற பெயரில் 10,000 கோடி ரூபாய்க்கும் மேற்பட்டு இருக்கும் கடன் தொகைகளை சொன்னபடி தள்ளுபடி செய்யாமல், கடுகளவுக் கடனை மட்டும் அடைப்பதாக கூறி விவசாயிகளை ஏமாற்றி, அவர்களை போராட்டக் களத்திற்கு தள்ளிவிட்டுள்ள இன்றைய பொய்க்கால் குதிரை அரசு, தற்போது நீர்த் திறப்பு செய்யாமல், ரூ. 134 கோடிக்கு சிறப்பு தொகுப்பு என்ற பெயரில் மற்றுமொரு ஏமாற்று அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலகமே எள் நினோ தத்துவத்தை பார்த்து மிரண்டு போயிருக்கிறது.
மேற்கு தொடர்ச்சி அலையில் மழை பெய்து கர்நாடகாவில் கபினி கி ஆர் சாகர் நிரம்பிய இன்னார்தான் மேட்டூர் ஸ்டான்லி அணைக்கு காவேரி தண்ணீர் கிடைக்கும்
நீங்கள் ஒரு விவசாயி என மார்தட்டி சொல்வேர்களே ...இதை ஆருடம் மழை பொழிவு பதித்தான் இருக்கலாம் என நிபுணர்கள் சொல்லியுள்ளார்கள். இதில் தண்ணீரை திறந்து விவசாயிகளை இன்னும் கடனாளி ஆக்க நினைக்கிறீர்களா ??????
உங்களது வாயை திறந்து எதுவும் ஒரு வருடத்திற்கு பேசவேண்டாவே வேண்டாம்
நிரந்தர பொது செயலாளர்.. அதிமுக வை கடைசி உறுப்பினர் இருக்கும் வரை அழிக்காமல் இவர் ஓய்வதில்லை..
தாங்கள் ஊர்ந்து தவழ்ந்து சென்று வாங்கிய முதலமைச்சர் பதவியை என்ன என்று சொல்வது ஏற்கனவே உள்ள கட்சியை நாமம் போட்டு அபகரித்து சூழ்ச்சி செய்து கூவத்தூர் நாடகத்தை அரங்கேற்றி அனுபவித்த முதலமைச்சர் நாற்காலியை என்ன என்று சொல்வது தாங்களே சொல்லுங்கள்.. விஜய்க்கு கிடைத்தது அவருடைய சொந்த முயற்சியில் மட்டும் தான்... அவருக்கு கிடைத்த ஓட்டுக்கள் அனைத்தும் அவருடைய முகத்திற்காகத்தான் தவிர வேறு யாரையும் முன் நிறுத்தி அவர் ஓட்டு கேட்கவில்லைமேலும்
-
சொல்கிறார்கள் –––––––––– சேர்ந்து வாழாவிட்டாலும் சிறந்த பெற்றோராக இருக்கணும்!
-
சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு
-
அதிக மழைப்பொழிவு எங்கே?
-
கோவில் நில ஆக்கிரமிப்பு கும்பல் அரசுக்கு எதிராக பிரசாரம் : முறியடித்து நிலத்தை மீட்க பக்தர்கள் வலியுறுத்தல்
-
முதல்வர் விஜய்க்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து
-
மிரட்டும் எதிரிகள் : பெண் அமைச்சர் ஆவேசம்