போலி வெற்றி நீண்ட நாள் நிலைக்காது; சொல்கிறார் உதயநிதி

5

சென்னை: பொய்களையும், அவதூறுகளையும் அள்ளி வீசி - மக்களை ஏமாற்றி, நீங்கள் பெற்றிருக்கும் போலி வெற்றி நீண்ட நாள் நிலைக்காது சிஎம் சார் என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி விமர்சனம் செய்துள்ளார்.

அவரது அறிக்கை: தேர்தல் பிரசாரத்தின் போது, தமிழகம் ஏதோ படுகுழிக்குள் விழுந்தது போலவும், கடனில் தத்தளிப்பதாகவும் Fake Narratives set செய்த இன்றைய முதல்வர், டில்லியில் நடந்த நிடி ஆயோக் கூட்டத்தில், தமிழகத்தின் சாதனைகள் என்று பெரும் பட்டியலை வாசித்து இருக்கிறார்.

இந்தியாவிலேயே 2 ஆவது பெரிய பொருளாதாரமாக தமிழகம் இருக்கிறது, இந்தியாவில் பணிக்குச் செல்லும் பெண்களில் 42 சதவீதம் மகளிர் தமிழகத்தை சேர்ந்தவர்கள், பெண் கல்வி, பாதுகாப்பு, சுகாதாரம் போன்றவற்றில் முன்னேற்றம், மகளிர் சுய உதவி குழுக்களின் வளர்ச்சி என்று முதல்வர் பேசி இருக்கிறார்.

இவை எல்லாம் அவருடைய ஒரு மாத கால SofaModel ஆட்சியில் நடந்த சாதனைகளா? அல்லது, 5 ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சியின் Achievements-ஆ? என்பதை முதல்வர் விளக்க வேண்டும். தேர்தலுக்கு முன்பு 'நீட் மட்டும் தான் உலகமா?' என்று கேட்டவர்.

இப்போது நீட் விலக்கு கேட்டு, அவர் பேசியதற்கு அவரே மறுப்பு கூறியிருக்கிறார். டில்லி வரை சென்றவர், நிடி ஆயோக் கூட்டத்திலோ, அல்லது கர்நாடகாவில் ஆட்சி செய்யும் அவருடைய புதிய கூட்டணிக்கட்சியிடமோ மேகதாது பிரச்னை பற்றி வாய் திறக்காமல் நமக்கெதுக்கு வம்பு என்று Silent ஆக திரும்பி இருக்கிறார்.

மொத்தத்தில், நிடி ஆயோக் கூட்டத்தில் திமுக அரசின் சாதனைகளின் மீது முழுக்க முழுக்க Sticker ஒட்டியிருக்கிறது SofaModel அரசு. பொய்களையும், அவதூறுகளையும் அள்ளி வீசி - மக்களை ஏமாற்றி, நீங்கள் பெற்றிருக்கும் போலி வெற்றி நீண்ட நாள் நிலைக்காது சிஎம் சார்உண்மை நிச்சயம் வெல்லும். இவ்வாறு உதயநிதி கூறியுள்ளார்.

Advertisement