நாகாத்தம்மன் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை
செய்யூர், ஜூன் 8–-
செய்யூர் பகுதியில் உள்ள நாகாத்தம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று விமரிசையாக நடந்தது.
செய்யூர் குளக்கரை பகுதியில் நாகாத்தம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலை புணரமைத்து கும்பாபிஷேகம் நடத்த கிராம மக்கள் முடிவு செய்து, கடந்த 2 ஆண்டுகளாக திருப்பணி மேற்கொண்டனர்.
திருப்பணி முடிந்து கடந்த 5ம் தேதி கும்பாபிஷேக விழாவிற்கான பூஜைகள் தோடங்கின.
கணபதி பூஜை கோ பூஜை, லட்சுமி பூஜை என விசேஷ பூஜைகள் செய்யப்பட்டது.
இதையடுத்து முக்கிய நிகழ்வான கும்பாபிஷேகம் நேற்று காலை 8:00 மணிக்கு நடந்தது. விமான கலசம் மற்றும் மூலவருக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் திரண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
விசாரணை கைதிகள் மரணத்தை தவிர்க்க போலீசாருக்கு கட்டுப்பாடு
-
'ஹார்ட் டிஸ்க்'குகள் திருட்டு; 3 தனிப்படைகள் அமைப்பு
-
மாணவர்களின் உயர் கல்விக்கு வழிகாட்ட ஆசிரியர் குழு
-
ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல் த.வெ.க., நிர்வாகி கைது
-
டூவீலரில் இருந்து தவறி விழுந்த குழந்தை மீது கார் ஏறி பலி: தப்பியோடிய டிரைவர் கைது
-
லாரி டிரைவர் வெட்டிக்கொலை
Advertisement
Advertisement