'ஹார்ட் டிஸ்க்'குகள் திருட்டு; 3 தனிப்படைகள் அமைப்பு

8

சென்னை: 'ஹார்ட் டிஸ்க்'குகள் திருட்டு வழக்கை விசாரிக்க, சி.பி.சி.ஐ.டி.,யில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னை அண்ணா சாலையில் உள்ள, மின்வாரிய தலைமை அலுவலகத்தில், தி.மு.க., ஆட்சியில் நடந்த மின்மாற்றிகள் கொள்முதல் ஊழல் தொடர்பான ஆவணங்கள் இருந்த, 'ஹார்ட் டிஸ்க்'குகள் திருடு போகின.

இது தொடர்பாக, இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இவ்வழக்கு விசாரணை, சி.பி.சி.ஐ.டி., போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

விசாரணை அதிகாரியாக, டி.எஸ்.பி., பிரபு நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு உதவியாக, மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு, விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement