லாரி டிரைவர் வெட்டிக்கொலை

தென்காசி: தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள கரடிகுளத்தைச் சேர்ந்தவர் ராமையா மகன் மாரிமுத்து 35.

லாரி டிரைவரான இவருக்கு மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு மாரிமுத்து தனது இருசக்கர வாகனத்தில் பொய்கை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது கருப்பன் கோவில் அருகே வழிமறித்த மர்ம கும்பல் அவரை அரி வாளால் சரமாரியாக வெட்டியது.

பலத்த காயமடைந்த மாரிமுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொலையை அரங்கேற்றிய கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.

கடையநல்லூர் போலீசார் மாரிமுத்துவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி, மாரிமுத்துவின் உறவினர்கள் இரவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண் தொடர்பு பிரச்னை காரணமாக கொலை நடந்திருக்கலாமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement