ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல் த.வெ.க., நிர்வாகி கைது
சேலம்: பண நெருக்கடியில் இருக்கும் பெண்களை குறிவைத்து உதவி செய்வது போல நடித்து, அவர்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி வந்த த.வெ.க., ஒன்றிய நிர்வாகியை, சேலம் கொண்ட லாம்பட்டி போலீசார் நேற்று கைது செய்தனர்.
சேலம் பட்டைக்கோவில் பகுதியைச் சேர்ந்த கணவரை இழந்த பெண் ஒருவர், சமீபத்தில் சமூக வலைதளத்தில் ஒரு ஆடியோவை வெளியிட்டார்.
அதில், 'என் குடும்ப சூழ்நிலை மற்றும் கடன் விவகாரத்தை பயன்படுத்தி, நெய்க்காரப்பட்டி புத்துார் அக்ரஹாரத்தைச் சேர்ந்த த.வெ.க., நிர்வாகி மணிகண்டன், 40, என்பவர் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கி தந்து என்னுடன் நெருங்கி பழகினார்.
'அப்போது ரகசியமாக எடுத்த வீடியோக்களை மொபைலில் அவர் படம்பிடித்து வைத்திருந்ததை சமீபத்தில் கண்டுபிடித்தேன். மேலும், பல பெண்களுடன் நெருக்கமாக இருந்த வீடியோக்களும் அவரது மொபைலில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.
'பணப் பிரச்னையில் இருக்கும் பெண்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு உதவுவது போல நடித்து ஆபாச வீடியோ எடுத்துக் கொள்கிறார்.
'அதன் பின், அந்த வீடியோவை காட்டி மிரட்டி, சம்பந்தப்பட்ட பெண்களை தன் நண்பர்களின் ஆசைக்கும் இணங்குமாறு கட்டாயப்படுத்துகிறார்' என குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆடியோ ஆதாரத்தின் அடிப்படையில் விசாரித்த போலீசார், மணிகண்டனை கைது செய்தனர்.