பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: கிரிக்கெட் சங்க நிர்வாகி மீது வழக்கு

ஆற்காடு: மகனை கிரிக்கெட் பயிற்சிக்கு அழைத்து சென்ற தாயிடம், பாலியல் தொந்தரவு அளித்தவர் மீது, போலீசார் வழக்கு பதிந்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகே வசிக்கும் பெண் ஒருவர், தன் மகனை, பாரி மைதானத்திற்கு கிரிக்கெட் பயிற்சிக்காக, பிப்ரவரி மாதம் அழைத்து சென்றார்.

ராணிப்பேட்டை கிரிக்கெட் அசோசியேஷன் துணை செயலர் பாஸ்கர் என்பவரிடம், மகனை பயிற்சியில் சேர்க்க, அந்த பெண் அணுகினார். அவரிடம், பாலியல் ரீதியாக பேசி, பாஸ்கர் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

ராணிப்பேட்டை கிரிக்கெட் அசோசியேஷனில், பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தும், பாஸ்கர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து, அந்த பெண், ராணிப்பேட்டை எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்தார். போலீசார், பாஸ்கர் மீது, வழக்கு பதிந்து, விசாரிக்கின்றனர்.

Advertisement