திறக்காமல் வீணாகும் துணைசுகாதார நிலைய கட்டடம் 

நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம்,பட்டீஸ்வரத்தில் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் உள்ள அரசு துணை சுகாதாரநிலைய கட்டடம் வீணாகி வருகிறது.

நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் காமாட்சிபேட்டையில் அரசு துணை சுகாதாரநிலையம் இயங்கி வந்தது. இந்த கட்டடம் பழுதாகியது. இதனால் பட்டீஸ்வரத்தில் ரூ.30 லட்சம் மதிப்பில் புதிய துணை சுகாதார நிலைய கட்டடம் கடந்த ஆண்டு கட்டப்பட்டது. இந்த கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு, ஒராண்டாகியும் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் துணை சுகாதாரநிலையம் தற்போது பாழடைந்த குழந்தைகள் மைய கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இதனால் கிராம செவிலியர் மற்றும் சிகிச்சைக்கு செல்லும் பொதுமக்கள், கர்ப்பிணி பெண்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். ஆகையால் கட்டி முடிக்கப்பட்ட அரசு துணை சுகாதார நிலைய கட்டடத்தினை உடனடியாக திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement