ஓரின சேர்க்கைக்கு மாணவியை அழைத்த பெண் மீது வழக்கு
திருச்சி: மா ணவியை, ஓரினசேர்க்கைக்கு அழைத்த, கல்லுாரி பெண் ஒருங்கிணைப்பாளர் மீது, போலீசார் வழக்கு பதிந்தனர்.
திருச்சி மாவட்டம், துடையூரில் இயங்கும், தனியார் கல்லுாரியில், மாணவி ஒருவர், இளங்கலை மருத்துவம் படிக்கிறார். இந்த கல்லுாரியில், சுபாஷினி, 25, என்பவர் ஒருங்கிணைப்பாளராக உள்ளார்.
துாத்துக்குடி மாணவியின் உடலில், தவறான அர்த்தத்துடன் தொட்டு பேசி, மறைமுகமாக ஓரின சேர்க்கைக்கு சுபாஷினி அழைத்ததாக தெரிகிறது. சில தினங்களுக்கு முன், அப்பகுதியில் உள்ள தோப்புக்கு, மாணவியை அழைத்து சென்று, பாலியல் சீண்டலில் சுபாஷினி ஈடுபட்டுள்ளார்.
மேலும், இதை வெளியே சொல்லக்கூடாது எனவும், மிரட்டியுள்ளார். புகாரில், வாத்தலை போலீசார், சுபாஷினி மீது வழக்கு பதிந்து, விசாரிக் கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலி/ சாய்வுத்தளம் அமைக்கும் பணி துவக்கம்
-
குப்பை தொட்டியாக மாறும் தேனி நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தயக்கம்
-
இடிந்து விழுந்த அங்கன்வாடி மையம்
-
பிரச்னையும் தீர்வும் பகுதிக்காக... அவசரகதியில் திறக்கப்பட்ட பஸ் ஸ்டாண்ட் நிழற்குடை , கழிப்பறை இன்றி பரிதவிக்கும் மக்கள்
-
பேனர் செய்தி
-
தொடர் மழை, பலத்த காற்றால் மேகமலை செல்ல கட்டுப்பாடு
Advertisement
Advertisement