காவிரியாற்றில் மூழ்கி பிக்கப் வேன் டிரைவர் பலி
ஒகேனக்கல்; சுற்றுலா வந்த பிக்கப் டிரைவர் காவிரியாற்றில் மூழ்கி பலியானார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள ஆவளபள்ளி, தோட்டக்கரி பகுதியை சேர்ந்தவர் பண்டரிநாதன். இவரது மகன் குமார், 35. ஓசூரி-லுள்ள தனியார் கம்பெனியில் பிக்கப் வாகன டிரைவராக பணியாற்றி வந்தார். அங்கு உடன் பணியாற்றும் நண்பர் குமரேசனுடன் நேற்று, ஒகேனக்கல்லுக்கு மகேந்திரா பிக்கப் வாகனத்தில் சுற்றுலா வந்தனர்.
ஊட்டமலை ஐயப்பன் கோவில் தெருவில் பிக்கப் வாகனத்தை நிறுத்தி விட்டு, பரிசல் துறைக்கு அருகே காவிரியாற்றில் குளித்து கொண்டிருந்தனர். அப்போது, குமார் ஆழமான பகுதியில் குளித்த போது, தண்ணீரில் மூழ்கி மாயமானர். தகவலறிந்த ஒகேனக்கல் தீயணைப்பு படை வீரர்கள், உள்ளூர் வாசிகளின் உதவியோடு, குமாரை சடலமாக மீட்டனர். ஒகே-னக்கல் போலீசார், விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நீட் தேர்வுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு; தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
-
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையவில்லை; கடும் நடவடிக்கை எடுக்க அண்ணாமலை வலியுறுத்தல்
-
கோமாவில் இருந்த தாய்லாந்து இளவரசி காலமானார்!
-
ரூ.134 கோடி சிறப்பு தொகுப்பு ஏமாற்று அறிவிப்பு; இபிஎஸ் விமர்சனம்
-
மும்பையில் ரூ.11 கோடி கஞ்சா கடத்தல்; 'மிஸஸ் கேரளா' போட்டியாளர் கைது
-
போலி வெற்றி நீண்ட நாள் நிலைக்காது; சொல்கிறார் உதயநிதி
Advertisement
Advertisement