அடிப்படை வசதிகளை மேம்படுத்த மலைவாழ் மக்கள் வேண்டுகோள்

அரூர்; தர்மபுரி மாவட்டம், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய, இரண்டு தாலுகாவிற்கு உட்பட்ட, சித்தேரி, கலசப்பாடி, சிட்லிங், காரப்பாடி, வாச்சாத்தி, ஏ.கே.தண்டா, சேலுார் உள்ளிட்ட பல்வேறு கிரா-மங்களில், பழங்குடியின மக்கள் வசிக்கின்-றனர்.இப்பகுதிகளில் சாலை, மின்சாரம், குடிநீர், சுகாதாரம் உள்ளிட்டவைகள் போதியளவில் இல்லை.

இதனால், மலைவாழ் பழங்குடியின மக்கள் கல்வி, பொருளாதாரத்தில், மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளனர். மேலும், பழங்குடி-யின இளைஞர்கள், பிழைப்புக்காக வெளி மாவட்-டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு வேலை தேடிச் செல்கின்றனர்.
எனவே, அரசு சார்பில், அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதுடன், வேலை வாய்ப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்க, மலைவாழ் மக்கள்
வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement