ஊட்டமேற்றிய தொழு உரம் விவசாயிகள் பயிற்சி
தேவிபட்டினம்:
தேவிபட்டினம் அருகே நாரணமங்கலம் கிராமத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ், ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரிப்பு குறித்த விவசாயிகள் பயிற்சி நடந்தது. வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) அம்பேத்குமார் வேளாண்மை துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான மானிய விவரங்கள் பற்றி விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். வேளாண்மை இணை இயக்குநர் பாஸ்கர மணியன் உயிர் உரங்களின் பயன்பாடு, மண் பரிசோதனை செய்வதன் அவசியம் மற்றும் தொழு உரம் தயாரித்தல் பற்றியும், விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். ரசாயன உரத்தை குறைத்து உயிர் உரங்கள் மற்றும் பசுந்தால் உரங்களை பயன்படுத்தி மண் வளத்தை பாதுகாக்கும் மாறும், மண்பரிசோதனை செய்து பயன்படுமாறும் வலியுறுத்தப்பட்டது. கூட்டத்தில் வட்டார வேளாண்மை துணை இயக்குநர்கள் அமர்லால், ராஜா, வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் நாகராஜன், அலுவலர்கள் ரவிச்சந்திரன், தொழில்நுட்ப மேலாளர் கோசலாதேவி பங்கேற்றனர்.
மேலும்
-
செயற்கை நுண்ணறிவுக்கு தலையாட்டினால் முதலாளியாகிவிடும்; நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்து
-
ஏப்ரல் கட்டணமே செலுத்தலாம்
-
தென் ஆப்ரிக்காவுக்கான துணை துாதராக கோவேந்தன் பொறுப்பேற்பு
-
பஞ்சாயத்து வாக்காளர் பட்டியலில் ‘மாஜி’ அமைச்சர் பெயர் ‘மிஸ்ஸிங்’
-
கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத்தில் சேர்ந்து நிதியுதவி பெற அழைப்பு
-
ஜமாபந்தியில் பெறப்படும் மனுக்களுக்கு உடனடி தீர்வு காண கலெக்டர் அறிவுறுத்தல்