சார்பு நீதிமன்றம் திறப்பு விழா

நிலக்கோட்டை, ஜூன் 12-

நிலக்கோட்டையில் புதிதாக அமையப் பெற்ற சார்பு நீதிமன்றம் திறப்பு விழா திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்தது.

மாவட்ட முதன்மை நீதிபதி பத்மநாபன் வரவேற்றார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுஸ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி காணொளி வாயிலாக நீதிமன்றத்தை திறந்து வைத்தார்.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேல்முருகன், சரவணன், ராமகிருஷ்ணன் ஆகியோர் காணொளி வாயிலாக சென்னை உயர்நீதிமன்றம் , உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இருந்து பேசினர்.

கலெக்டர் துர்கா, எஸ்.பி.,பிரதீப், மாவட்ட நீதிபதிகள், நிலக்கோட்டை வழக்கறிஞர்கள் சங்கத்தலைவர் வணங்காமுடி, செயலாளர் செல்லபாண்டியன் பங்கேற்றனர். தலைமை குற்றவியல் நீதிமன்ற நடுவர் இன்பகார்த்திக் நன்றி கூறினார்.

Advertisement