தங்கம் விலை இன்றும் ரூ.1,040 குறைவு; கடந்த 3 நாட்களில் 3,280 சரிவு
சென்னை: வார வர்த்ததகத்தின் முதல் நாளான இன்றும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,040 குறைந்துள்ளது. இதன்மூலம், கடந்த 3 நாட்களில் மட்டும் ரூ.3,280 அதிகரித்துள்ளது.
மேற்காசியாவில் நிலவும் போர் காரணமாக,சர்வதேச சந்தைகளில் நிலவும் மாற்றங்களினால் தங்கம் விலை தொடர்ந்து உயர்வை சந்தித்து வருகிறது. சென்னையில் கடந்த ஜூன் 5ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு, 50 ரூபாய் குறைந்து, 14,430 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 400 ரூபாய் சரிவடைந்து, 1,15,440 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு, ஐந்து ரூபாய் குறைந்து, 280 ரூபாய்க்கு விற்பனையானது.
நேற்று முன்தினம் (ஜூன் 06) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1840 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 600 ரூபாய்க்கும், கிராமுக்கு 230 ரூபாய் குறைந்து 14,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில் தங்கம் விலை கிராமுக்கு, 130 ரூபாய் குறைந்து, 14,070 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு, 1040 ரூபாய் சரிவடைந்து, 1,12,560 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கடந்த 3 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு 3,280 ரூபாய் சரிந்துள்ளது.
வெள்ளி விலையில் எந்த வித மாற்றமுல் இல்லாமல் ஒரு கிராம் 270க்கு விற்பனையாகிறது.
மேலும்
-
தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலி/ சாய்வுத்தளம் அமைக்கும் பணி துவக்கம்
-
குப்பை தொட்டியாக மாறும் தேனி நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தயக்கம்
-
இடிந்து விழுந்த அங்கன்வாடி மையம்
-
பிரச்னையும் தீர்வும் பகுதிக்காக... அவசரகதியில் திறக்கப்பட்ட பஸ் ஸ்டாண்ட் நிழற்குடை , கழிப்பறை இன்றி பரிதவிக்கும் மக்கள்
-
பேனர் செய்தி
-
தொடர் மழை, பலத்த காற்றால் மேகமலை செல்ல கட்டுப்பாடு