தொடர் மழை, பலத்த காற்றால் மேகமலை செல்ல கட்டுப்பாடு
சின்னமனூர்;மாவட்டத்தில் தொடர் மழை, பலத்த காற்று இருப்பதால் மேகமலைக்கு செல்லும் வாகனங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை ஜூன் 4 ல் கேரளாவில் பெய்ய துவங்கியது. கடந்த ஜூன் 6 முதல் மேகமலை பகுதியில் மழை பெய்ய துவங்கியது.மேகமலை, ஹைவேவிஸ், வெண்ணியாறு மேல் மணலாறு, கீழ் மணலாறு, இரவங்கலாறு, மகாராஜா மெட்டு, தூவானம் உள்ளிட்ட பகுதிகளில் மழை தொடர்ந்து இரவும் பகலும் பெய்து வருகிறது. மழையும் பலத்த காற்றும், பனி மூட்டமும் நிலவுகிறது. பகலும் மாலைப் பொழுதைப் போன்று தெரிகிறது. - எதிர் எதிரே வரும் வாகனங்கள், நடந்து வரும் நபர்கள் கூட தெரியாத நிலை உள்ளது.
இதனால் சின்னமனூர் ரேஞ்சர் திருமுருகன் தலைமையில் வனத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். அதன்படி நேற்று முதல் மேகமலை ஹைவேவிஸ் செல்லும் டூவீலர்கள் மதியம் ஒரு மணிக்கு மேல் அனுமதி கிடையாது. நான்கு சக்கர வாகனங்களும் மதியம்3 மணி வரை மட்டுமே அனுமதி என்று அறிவித்துள்ளனர்.
இது தவிர பனிமூட்டம் அதிகம் இருப்பதால் வாகனங்களில் முகப்பு மஞ்சள் விளக்கை எரிய செய்து செல்லவும் வலியுறுத்தி உள்ளனர். வனத்துறை சோதனை சாவடியில் இருந்து ஹைவேலிஸ் மலை ரோட்டில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும்
-
டொயோட்டா 'இன்னோவா கிரிஸ்டா' வெளிப்புற டிசைன், புதிய அம்சங்கள் சேர்ப்பு
-
கூட்டுறவு அதிகாரிகளை கண்டித்து 2வது நாளாக வேலை நிறுத்த போராட்டம்
-
13 ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் காஞ்சி மருத்துவமனை நுழைவாயில்; நோயாளிகள் அவதி
-
ரயில்வே ஸ்டேஷனில் சோதனை
-
டஸ்டர் 1 லிட்டர் டர்போ மைலேஜ்
-
இஸ்ரேலிய குடியேறிகள் மீது பிரிட்டன் உள்ளிட்ட 5 நாடுகள் பொருளாதார தடை