அவசரகதியில் திறக்கப்பட்ட பஸ் ஸ்டாண்ட் :நிழற்குடை , கழிப்பறை இன்றி பரிதவிக்கும் மக்கள்
வேடசந்துார்:வேடசந்துாரில் ரூ.1.15 கோடியில் புதிதாக கட்டிய பஸ் ஸ்டாண்ட்டில் பயணிகள் நிழற்குடை, பொது கழிப்பறை, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாததால் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
வேடசந்துார் பழைய பஸ் ஸ்டாண்டில் பயணிகள் நிற்க விசாலமான இடம், 20 கடைகளுடன் பிரமாண்டமாக இருந்தது. இதன் கிழக்கு பகுதியில் கூரை சிதிலமடைந்து விழுந்ததில் இருவர் லேசான காயம் அடைந்தனர். இதையடுத்து ஓராண்டுக்கு முன் பஸ் ஸ்டாண்ட் இடிக்கப்பட்டது. தி.மு.க., ஆட்சியில் ரூ.1.15 கோடி மதிப்பில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டு திறப்பு விழா நடந்தது. திறந்து சில மாதங்கள் ஆன நிலையில் இன்னும் முன்புற பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைக்கவில்லை. இதனால் மழை, வெயிலில் பயணிகள் வெட்டவெளியில் நிற்கும் நிலை உள்ளது.
ஆண், பெண்களுக்கு என இரு அறைகள் இருந்தாலும் வெட்டவெளியில் நின்று பஸ் ஏறுவதையே விரும்புகின்றனர். தற்காலிகமாக பிளாஸ்டிக்கால் அமைத்துள்ள குளியல் அறையையும் பயன்படுத்தி விரும்பவில்லை. மேற்கு பகுதியில் புதிய கழிப்பறை கட்டும் பணி பாதியில் நிற்பதால் பயணிகள், பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் வெட்டவெளியில் சிறுநீர் கழிக்கும் நிலை உள்ளது.
புதிதாக கட்டி உள்ள 5 கடைகளுக்கு முறையான டெண்டர் விட்டு திறக்கவில்லை. பஸ் ஸ்டாண்டின் உட்புறம் 4 இடங்களில் இரும்பு கம்பங்களுடன் அமைத்துள்ள மின்விளக்குகள் சரிவர எரிவதில்லை.
தெற்கு பகுதியில் 50க்கு மேற்பட்ட டூவீலர்களை நிறுத்தி பார்க்கிங் பகுதியாக பயன்படுத்துவதால் பஸ்கள் வந்து நிற்பதற்கும், கடைகள் வைத்துள்ளவர்களுக்கும் இடையூறு ஏற்படுகிறது.ஆட்சி முடிவதால் அவசரகதியில் திறக்கப்பட்ட வேடசந்துார் பஸ் ஸ்டாண்டை முறையாக விரிவுபடுத்தி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
வசதிகள் ஏற்படுத்துங்க
டி.ராமசாமி, தலைவர், குடகனாறு பாதுகாப்பு சங்கம், வேடசந்துார்:20 கடைகளுடன் நன்றாக இருந்த பழைய பஸ் ஸ்டாண்டை இடித்துவிட்டனர். அதில் இருந்த கம்பிகளே ரூ. பல லட்சங்கள் விலை போயிருக்கும். தி.மு.க., ஆட்சியில் அவசரகதியில் கட்டப்பட்ட புதிய பஸ் ஸ்டாண்டால் யாருக்கும் முறையான பயன்பாடு இல்லை. நிழற்குடை இன்றி பயணிகள் வெட்டவெளியில் நிற்கின்றனர். கழிப்பறை, தண்ணீர் வசதி முறையாக இல்லை. கூடுதல் நிதி ஒதுக்கி பஸ் ஸ்டாண்டை முழுமை பெற செய்ய வேண்டும்.
கடைகளுக்கு வெளிப்படையான டெண்டர்
பி.சுகுமார், தலைவர், அனைத்து வர்த்தகச்சங்கம், வேடசந்துார்.
பழைய பஸ் ஸ்டாண்ட் நன்றாக உள்ள நிலையில் இடிக்க வேண்டாம் என கூறினோம். தினமலர் நாளிதழிலும் செய்தி வெளியானது. இருந்தும் புதிதாக கட்டினால் வருமானம் கிடைக்கும் எனக்கருதி இடித்துவிட்டனர்.குறைந்த திட்ட மதிப்பில் கட்டப்பட்ட புதிய பஸ் ஸ்டாண்ட் முழுமை பெறவில்லை. அருகில் உள்ள நிலத்தை வாங்கி பஸ் ஸ்டாண்டை அகலப்படுத்துவதாக கூறினர். ஏனோ கிடப்பில் உள்ளது.
புதிய பஸ் ஸ்டாண்டில் கட்டப்பட்டுள்ள 5 கடைகளுக்கு நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்து முறையாக டெண்டர் விட வேண்டும். தற்போது புதிய ஆட்சி அமைந்து உள்ள நிலையில் இவை நியாயமாக நடக்கும் என எதிர்பார்க்கிறோம். பஸ் ஸ்டாண்ட் முன்பகுதியில் கூரை அமைத்தல், கழிப்பறை, குடிநீர் வசதிகளை முறைப்படுத்த வேண்டும்.
தீர்வு;
20 கடைகளுடன் நல்ல முறையில் இருந்த பழைய பஸ் ஸ்டாண்டை இடித்து தரைமட்டமாக்கி புதிய பஸ் ஸ்டாண்ட் என்ற பெயரில் ஓர் கூடாரத்தை உருவாக்கி விட்டார்கள்இந்த புது பஸ் ஸ்டாண்டை பொது மக்கள் யாரும் விரும்பவில்லை. ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள் இடித்து அகற்றிவிட்டு புதிய பஸ் ஸ்டாண்டையும் பெயர் அளவிற்கு கட்டிவிட்டார்கள். பஸ் ஸ்டாண்ட் திறப்பு விழாவில் பஸ் ஸ்டாண்ட் விரிவுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. இன்னும் கூடுதலாக எந்த பணிகளும் நடைபெறவில்லை.கட்டிய புது பஸ் ஸ்டாண்டில் கூரை அமைத்து பயணிகளை மழை வெயிலில் இருந்து பாதுகாக்க வேண்டும். முதலில் பொதுக் கழிப்பறையை கட்டி முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். கடைகளை முறையாக, கூடுதல் வசூல் இன்றி, ஓபன் டெண்டர் விட வேண்டும். அருகிலுள்ள மின்வாரியத்திடமிருந்து நிலத்தைப் பெற்று பஸ் ஸ்டாண்டை விரிவு படுத்த வேண்டும். பல்வேறு சமூக மக்கள் வாழும் ஓர் பகுதியில் புதிதாக கட்டப்படும் ஓர் பஸ் ஸ்டாண்ட், போதிய வசதிகளுடன் இருக்க வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக, கோரிக்கையாக உள்ளது .
பஸ் ஸ்டாண்டில் சோத்துக்கடை நூறு இருக்கு. தமிழனுக்கு அது போதும்.மேலும்
-
மாவட்ட பா.ஜ.,வில் விலகிய நிர்வாகிகள் அண்ணாமலை இயக்கத்தில் இணைவு
-
புதுச்சேரியை உலுக்கிய மின்தடை 22 மணி நேரத்திற்கு பின் முடிவுக்கு வந்தது
-
மொபைல் போன் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
-
புதுச்சேரியில் 102 டிகிரி வெயில்
-
நிடி ஆயோக் கூட்டத்தில் ரங்கசாமி பங்கேற்காதது ஏன்?
-
வியாபாரி மாயம் போலீஸ் விசாரணை