குப்பை தொட்டியாக மாறும் தேனி: நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தயக்கம்

தேனி:தேனி நகராட்சி பகுதியில் குப்பை முறையாக அகற்றததைால் தேனி நகரம் குப்பை தொட்டியாக மாறி வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

தேனி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. தினமும் வார்டுகளில் சுகாதார பிரிவு மூலம் குப்பை அகற்ற வேண்டும். குப்பை அகற்றும் பணி தனியாருக்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. ஆனால், பல மாதங்களாக தெருக்களில் குப்பை அகற்றும் பணி வீடுகளில் இருந்து குப்பை சேகரிக்கும் பணியில் தொய்வு காணப்படுகிறது. நகராட்சியை குப்பை தொட்டி இல்லாத நகராட்சி என அறிவித்துள்ளதால் நகர்பகுதியில் எங்கும் குப்பை தொட்டி இல்லை. ஆனால், நகராட்சி பகுதி முழுவதும் பல இடங்களில் குப்பை கொட்டி உடனுக்குடன் அற்றததால் நகரமே குப்பை தொட்டியாக காட்சியளிக்கிறது. என்.ஆர்.டி., நகர், சமதர்மபுரம், கோட்டை களம் தெரு, அல்லிநகரம், பெரியகுளம் மெயின் ரோட்டில் பல இடங்கள் குப்பை மேடுளாக மாறி உள்ளன. இதனால் தேனி நகர்பகுதியில் சுகாதார சீர்கேடு அதிகரித்து உள்ளது. இதனால் நோய் தொற்றுகள் பரவும் அபாயமும் உள்ளது. இதே நிலை பல மாதங்கள் தொடர்ந்தாலும் குப்பையை முழுமையாக அகற்றாமல் நகராட்சி அதிகாரிகள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

Advertisement