சிங்கப்பெண் அதிரடிப்படையை நாளை துவங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்
சென்னை: குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க சிங்கப்பெண் அதிரடிப்படையை நாளை (ஜூன் 09) மாலை 5 மணிக்கு முதல்வர் விஜய் துவக்கி வைக்கிறார்.
மகளிர், சிறுமியர் பாதுகாப்புக்காக, காவல் துறையில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை என்ற புதிய பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. முதல்வர் விஜய் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் இப்படைக்கு, ஐ.ஜி.,யாக பவானீஸ்வரி நியமிக்கப்பட்டு உள்ளார்.
இதை தொடர்ந்து, நவீன், திவ்யதங்கம் ஆகிய இரண்டு எஸ்.ஐ.,க்கள் உட்பட, 18 போலீசார் நியமிக்கப் பட்டுள்ளனர். இவர்கள், பஸ் நிறுத்தங்கள், ரயில் நிலையங்கள், கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள், தகவல் தொழிநுட்ப பூங்காக்கள் என, மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர்.
குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க சிங்கப்பெண் அதிரடிப்படையை சென்னை, ராஜரத்தினம் மைதானத்தில் நாளை (ஜூன் 09) மாலை 5 மணிக்கு முதல்வர் விஜய் துவக்கி வைக்கிறார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முழுவீச்சில் நடந்து வருகிறது.
அதற்குள் யாரும் கல்யாணம், வளைகாப்பு என்று கூப்பிடாமல் இருக்க வேண்டும்
மூன்று வாரமாகிவிட்டது. திமுக ஆட்சியை விட கூடுதல் வன்கொடுமை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடந்துள்ளன. குற்றவாளிகளை நொங்கெடுத்திருக்க வேண்டாமோ? அப்போதுதானே மற்றவர்களுக்கு பயம் இருக்கும். போய் யோகியிடம் ஒரு மாதம் ட்ரைனிங் எடுத்து வர சொல்லுங்க
இதுவும் திமுக மாதிரி ஒரு விளம்பர அரசு தான் போல் இருக்கு டெய்லி எதாவது உருட்டல் செய்தி
மேற்கு வங்காளம் உடனடியாக பல திட்டங்கள் நிறைவேற்றி உள்ளன. மாதம் 3500 இலவச பஸ் மேற்கு வங்காளம் முழுவதும். டபுள் இன்ஜின் ஆட்சி.
திமுக போல பாஜாக அரசை விமர்சனம் செய்தால் துன்ப படுவது தமிழ் நாட்டு மக்கள்.
மொத கையெழுத்தை நிறைவேற்றவே... ஒரு மாசமாச்சு...? அனைத்து பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணம், 2500 ரூபாய் உதவி, தாய்மாமன் சீர், ஒரு சவரன் தாலி, படித்து வேலையில்லாதவர்களுக்கு 4000 ரூபாய்... இதெல்லாம் என்ன ஒரு 20 வருஷத்துக்குள்ளார செயல்படுத்துடுவீங்களா...?
நல்ல சுபயோக நாள் .... நாள் நட்சத்திரம் பார்த்து நடக்கிறார்
மகிழ்ச்சி, தேர்தல் வாக்குறுதியை ஒரு மாதத்திற்குள் நிறைவேற்றும் முதல்வருக்கும், உறுதுணையாய் இருக்கும் தவேக கட்சியினர் மற்றும் அதிகாரிகளுக்கும் பாராட்டுக்கள்.
மொதல் கையெழுத்தையே நிறைவேற்றவே ஒரு மாசமா...? விளங்கிடும்... இதை பாராட்டுறியே... உன்ன என்ன சொல்லி திட்டுறது...?
சிங்கப்பெண்ணே சிங்கப்பெண்ணே ஆணினமே உன்னை வணங்குமே
நன்றி கடன் தீர்ப்பதற்கு கருவிலே உன்னை ஏந்துமே
ஒருமுறை தலைகுனி நீ ரெண்டு சிங்க முகத்தை பார்ப்பதற்கு மட்டுமே
நெஞ்சில் வலிமை கொண்டு ஏறு உன்னை பெண்ணென்று கேலி செய்த
கூட்டம் ஒருநாள் உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு
அன்னை தங்கை மனைவி என்று வீணடித்த வியர்வை உந்தன்
பாதைக்குள் பற்றும் அந்த தீயை அணைக்கும்
நீ பயமின்றி துணிந்து செல்லுமேலும்
-
இந்தியர்கள் ஈரான் பயணத்தை தவிர்க்க மத்திய அரசு உத்தரவு
-
டில்லியில் கூடியது இண்டி கூட்டணி கூட்டம்; விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்பு
-
திறக்காமல் வீணாகும் துணைசுகாதார நிலைய கட்டடம்
-
சிறுமியை கர்ப்பமாக்கிய 2 பெயின்டர்கள் சிக்கினர்
-
பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: கிரிக்கெட் சங்க நிர்வாகி மீது வழக்கு
-
ஓரின சேர்க்கைக்கு மாணவியை அழைத்த பெண் மீது வழக்கு