யூடியூபர் மாரிதாஸ் கைது

80

மதுரை: அமைச்சர்கள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக யூடியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழக அரசு குறித்தும், முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர்கள் பற்றியும் யூடியூபர் மாரிதாஸ் சமூக வலைதளங்களில் தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வந்தார். அமைச்சர் கீர்த்தனா தொடர்பாக அவர் வெளியிட்ட படம், ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டது என்று பலரும் புகார் தெரிவித்தனர். அமைச்சர்கள் ஆதவ் உள்ளிட்டோர் மீதும் அவர் கடுமையான குற்றச்சாட்டுகளை பதிவு செய்து வந்தார்.

இந்த நிலையில், மதுரையில் உள்ள வீட்டில் இருந்த மாரிதாஸை சென்னை சைபர் கிரைம் போலீசார் இன்று கைது செய்தனர். அவரை விசாரணைக்காக போலீசார் சென்னை அழைத்துச் சென்றனர்.





@block_Y@

இதுதான் மாற்று அரசியலா?



பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை; தவெகவின் “ரீல்ஸ் மாடல்” அரசின் ரியல் முகத்தை மக்களுக்கு விளக்கிக் கூறிய ஒரே காரணத்திற்காக சமூக ஊடகவியலாளர் மாரிதாஸை தடாலடியாக கைது செய்திருக்கும் முதல்வர்ஜோசப் விஜயின் அராஜகம் கடும் கண்டனத்திற்குரியது. தங்கள் நிர்வாகத்தின் மீதான சாதாரண விமர்சனங்களைக் கூட பொறுத்துக் கொள்ள முடியாமல் இப்படி அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுவது தான் தவெக முன்மொழிந்த மாற்று அரசியலா? ஆட்சி மாறினாலும் அவலங்கள் மாறவில்லை என்பதை போல, திமுகவிற்கு மாற்று சக்தி என்று கூறி மக்கள் மனதைக் கலைத்து ஆட்சிக்கு வந்து விட்டு, பொதுமக்களின் ஜனநாயகக் குரல்வளையை நெறிப்பதில் திமுகவை விட தவெக அசுர வேகத்தில் செயல்படுவது வெட்கக்கேடானது. எனவே, கைது செய்யப்பட்ட திரு. மாரிதாஸ் அவர்களை அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்! திமுகவைப் போலவே காவல்துறையை தங்கள் கைக்கூலிகளாகப் பயன்படுத்தி, பொதுமக்களின் கருத்து சுதந்திரத்தை அபகரிக்க தவெக அரசு முயல்வதை தமிழக பாஜ ஒருபோதும் அனுமதிக்காது!, என குறிப்பிட்டுள்ளார்.block_Y

Advertisement