காரைக்குடி டீக்கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு
காரைக்குடி: காரைக்குடி டீக்கடையில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காரைக்குடி சேர்வார் ஊரணி பகுதியைச் சேர்ந்தவர் சந்தானகுமார் 50. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. சந்தானகுமாரின் தாயார் வீட்டின் எதிரே டீக்கடை நடத்தி வருகிறார். தனது மகன் சந்தானகுமாரிடம் அடிக்கடி பிரச்சனை செய்பவர்களை திட்டியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சிலர் நேற்று இரவு டீக்கடையில் பெட்ரோல் குண்டு வீசினர்.
இதுகுறித்து காரைக்குடி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சேர்வார் ஊரணியை சேர்ந்த அசோக், மணிசரண், சபரி, அமீர் ஆகிய நான்கு பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்குடியில் நடந்த பெட்ரோல் குண்டு வீச்சு அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
வாசகர் கருத்து (1)
sankar - Nellai,இந்தியா
08 ஜூன்,2026 - 12:21 Report Abuse
சட்டம் ஒழுங்கு சங்கடங்கள் - பெரும் பிரச்சினைதான் இந்த அரசுக்கு - ஆனால் இவர்கள் வசம் எந்த க்ழுவும் இல்லை போல இருக்கே - வசனம் பேசியே வாழ்நாள் கழிந்துவிடுமோ 0
0
Reply
மேலும்
-
இந்தியர்கள் ஈரான் பயணத்தை தவிர்க்க மத்திய அரசு உத்தரவு
-
டில்லியில் கூடியது இண்டி கூட்டணி கூட்டம்; விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்பு
-
திறக்காமல் வீணாகும் துணைசுகாதார நிலைய கட்டடம்
-
சிறுமியை கர்ப்பமாக்கிய 2 பெயின்டர்கள் சிக்கினர்
-
பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: கிரிக்கெட் சங்க நிர்வாகி மீது வழக்கு
-
ஓரின சேர்க்கைக்கு மாணவியை அழைத்த பெண் மீது வழக்கு
Advertisement
Advertisement