டொயோட்டா 'இன்னோவா கிரிஸ்டா' வெளிப்புற டிசைன், புதிய அம்சங்கள் சேர்ப்பு

'டொயோட்டா' நிறுவனம், அதன் 'இன்னோவா கிரிஸ்டா' எம்.பி.வி., காரை மேம்படுத்தி, 2026 மாடலில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை, 83,000 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது.


7 மற்றும் 8 சீட்டர் மாடல்களில் வரும் இந்த காரில் இயந்திர மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை. 2.4 லிட்டர், 4 - சிலிண்டர், டர்போ டீசல் இன்ஜின், 5 - ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், ரியர் வீல் டிரைவ் அமைப்பு ஆகியவை நீடிக்கின்றன.
முன்புற கிரில், பம்பர்கள், குரோம் அலங்காரம், 17 அங்குல அலாய் சக்கரங்கள், டேஷ்போர்டு, ஏ.சி., கன்ட்ரோல், சீட்கள் உள்ளிட்டவை மேம்படுத்தப்பட்டுள்ளன. மாடலை பொறுத்து, 3 அல்லது 7 - காற்று பைகள், க்ரூஸ் கன்ட்ரோல், பவர்டு சீட், எல்.இ.டி., ப்ரொஜெக்டர் ஹெட்லைட் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. ஒயர்லெஸ் சார்ஜர், டயர் அழுத்தம் கண்காணிப்பு வசதி புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.

360 டிகிரி கேமரா, சன்ரூப், குளுகுளு சீட், அடாஸ் வசதி, ஆட்டோ கியர்பாக்ஸ் ஆகியவை கிடைப்பதில்லை.

@block_B@ விலை: ரூ. 19.72 - ரூ. 26.63 லட்சம்block_B

@block_B@ இன்ஜின் - 2.4 லிட்டர், டர்போ டீசல் பவர் - 148 ஹெச்.பி., டார்க் - 343 என்.எம்., மைலேஜ் - 15 கி.மீ., டேங்க் - 55 லிட்டர் கிரவுண்ட் கிளியரன்ஸ் - 178 எம்.எம்., பூட் ஸ்பேஸ் - 300 லிட்டர்block_B

Advertisement