வியாபாரி மாயம் போலீஸ் விசாரணை

புதுச்சேரி: புதுச்சேரி பிருந்தாவனம் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் ராமமூர்த்தி மகன் விக்னேஷ்குமார், 34. இவர் நேரு வீதி மார்க்கெட்டில் காய்கறி கடை நடத்தி வருகிறார். இவர் வீட்டில் இருந்து கடந்த 5ம் தேதி, பைக்கில் வெளியே சென்றார். இரவு வரை வீட்டுக்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

புகாரின் பேரில் டி.நகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement