மாவட்ட பா.ஜ.,வில் விலகிய நிர்வாகிகள் அண்ணாமலை இயக்கத்தில் இணைவு
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட பா.ஜ., கட்சியில் இருந்து நுாற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் விலகி அண்ணாமலை இயக்கத்தில் இணைந்தனர்.
தமிழக பா.ஜ., மாநில தலைவராக இருந்த அண்ணாமலை, அந்த கட்சியில் இருந்து விலகி புதிய இயக்கம் துவங்கியுள்ளார். தமிழக பா.ஜ., மாநில நிர்வாகிகள் பலரும் பா.ஜ.,வில் இருந்து விலகி அண்ணாமலையின் இயக்கத்தில் இணைந்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்ட பா.ஜ., மாநில துணை தலைவராக இருந்த முன்னாள் எம்.எல்.ஏ., சம்பத், மாநில செயலாளர் முரளி ரகுராமன் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்பே அண்ணாமலை இயக்கத்தில் இணைந்தனர். நேற்று மாவட்ட பொருளாளர் முருகன், துணை தலைவர்கள் குபேரன், சிலம்பரசன் உள்ளிட்ட மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் பா.ஜ.,வில் இருந்து விலகினர்.
இவர்கள், தங்களின் ராஜினாமா கடிதத்தோடு, விழுப்புரம் எல்லீஸ்சத்திரம் சாலையில் உள்ள மாவட்ட பா.ஜ., அலுவலகத்திற்கு திரண்டு ராஜினாமா கடிதத்தை கட்சி அலுவலகத்தில் ஒப்படைத்து விட்டு சென்றனர்.
இது பற்றி அவர்கள் கூறியதாவது.
அண்ணாமலை பா.ஜ., தலைவராக இருந்த போது பா.ஜ.,வின் ஓட்டு வங்கி 18 சதவீதமாகவும், தனித்து போட்டியிடும் போது 11 சதவீதமாக இருந்தது. அவர் தலைவர் பதவியில் இல்லாத நிலையில் தற்போது ஓட்டு வங்கி ஒரு சதவீதத்திற்கும் கீழ் சென்றுள்ளது. தற்போது மாநில தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் கட்சியை வளர்க்கவில்லை.
அவர்களிடம் ஒருங்கிணைப்பும் இல்லை. உழைத்தவர்களை மதிக்கவில்லை. இதனால் நாங்கள் பா.ஜ.,வில் இருந்து விலகி அண்ணாமலையோடு இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளதாக கூறினர். இதன் மூலம் விழுப்புரம் மாவட்ட பா.ஜ., கட்சியில் நிர்வாகிகளின் எண்ணிக்கை குறைந்து வருவது தெரிகிறது.
மேலும்
-
'ஒரு தலைமுறையை வாழ வைக்கும் பயிர்' எண்ணெய் பனை 15 ஹெக்டேரில் சாகுபடி
-
கரூரில் 'வீ த லீடர்ஸ்' உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம்
-
கிருஷ்ணராயபுரம் பகுதியில் பூக்கள் விற்பனை மந்தம்
-
அப்போ அணில்; இப்போ 'பியூஸ் கேரியர்'; மின் தடை குறித்து பழனிசாமி கிண்டல்
-
பாலப்பட்டி சாலையில் முள் செடிகள் அகற்றம்
-
லாலாப்பேட்டை மண்டியில் வாழைத்தார் விற்பனை ஜோர்