திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம் குறித்து கேள்வி; முதல்வர் முடிவு செய்வார் என அமைச்சர் ரமேஷ் பதில்
பழநி: திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு முதல்வர் விஜய் முடிவு செய்வார் என ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் கூறினார்.
திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலுக்கு ஹிந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ் வந்தார். கொடைக்கானல் சாலை சந்திப்பில் அலங்கார நுழைவாயில், கிரிவீதியில் ராக்கால நந்தவனத்தை பழநி அ.தி.மு.க.,எம்.எல்.ஏ., ரவிமனோகரனுடன் இணைந்து திறந்து வைத்தார். திறப்பு விழாவிற்காக வைக்கப்பட்ட பேனர்களில் எம்.எல்.ஏ., ரவிமனோகரன் படம், பெயர் இடம் பெறாதது குறித்து அ.தி.மு.க.,வினர் புகார் எழுப்பினர். இதற்காக எம்.எல்.ஏ.,விடம் அமைச்சர் வருத்தம் தெரிவித்தார்.
வரிசையில் நின்று தரிசனம் ரோப்கார் மூலம் பழநி முருகன் கோயிலுக்கு சென்ற அமைச்சர் பொது தரிசன வழியில் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தார். அன்னதான கூடத்திற்கு சென்ற அவர் பக்தர்களோடு வரிசையில் ஒரு மணி நேரம் காத்திருந்து அன்னதானம் உட்கொண்டார். ரோப்கார் மூலம் அடிவாரம் வந்து அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்.
நிருபர்களிடம் அமைச்சர் ரமேஷ் கூறியதாவது: பழநி கோயிலில் நடந்து வரும் கட்டுமான பணிகள், அன்னதானத்தின் தரம், பஞ்சாமிர்தம் தயாரிக்கும் பணிகள் ஆய்வு செய்யப்பட்டது. கடந்த ஐந்து ஆண்டு ஆட்சியில் கோயில் செயல்பாடுகள் வியாபார நோக்கில் நடந்துள்ளன. அதை மாற்றி பக்தர்கள் பயன்படக்கூடிய வகையில் நடவடிக்கை எடுக்க ஆய்வு செய்யப்பட்டது. திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தில் முதல்வர் முடிவு செய்வார். அமைச்சர் என்ற முறையில் ஹிந்து சமய அறநிலைத்துறை நிர்வாகத்தை கவனிக்கும் பொறுப்பு என்னிடம் உள்ளது என்றார்.
வாசகர் கருத்து (26)
Sun - ,
09 ஜூன்,2026 - 17:56 Report Abuse
அமைச்சர் மிக இளைஞராக இருந்தாலும் மிகவும் புத்திசாலியாகவும், தெளிவாகவும் இருக்கிறாரே?அ.தி.மு.க எம்.எல்.ஏ பிரச்சனையில் இந் நேரம் தி.மு.க அமைச்சராக இருந்திருந்தால் போஸ்டரில் பெயர் இருந்தால்தான் அ.தி.மு.க எம்.எல்.ஏ மக்கள் பணி செய்வாரா? அவரிடமே கேளுங்கள் என அரசியல் செய்திருப்பார்கள். பிரச்சனையை அழகாக கையாண்டு சரி செய்துள்ளார். நல்ல தேர்வு. வாழ்த்துக்கள். 0
0
Reply
தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU,இந்தியா
09 ஜூன்,2026 - 13:01 Report Abuse
முதல்வர் முடிவு செய்வார் என அமைச்சர் ரமேஷ் பதில் ......... கோர்ட்டு ஏற்கனவே முடிவு பண்ணி தீர்ப்புக் கொடுத்தாச்சுன்னு .... 0
0
Reply
ஆரூர் ரங் - ,
09 ஜூன்,2026 - 11:50 Report Abuse
ஆலயங்களை நிர்வகிக்கும் உரிமை அரசுக்கு துளியும் கிடையாது. நிதி நிர்வாகம் சரியில்லாமல் இருக்கும்போது மட்டும் குறிப்பிட்ட காலத்துக்கு மேற்பார்வை செய்துவிட்டு பிறகு அறங்காவலர்கள் வசம் ஒப்படைக்க வேண்டும் என்பது சட்டம். ஆனால் அரசே நிரந்தரமாக ஆக்கிரமித்து நடத்துகின்றது. அரசு அதிகாரிகள் தக்காராக இருக்க சட்டத்திலும் இடமில்லை. இதைத் தெரிந்தும் இந்த அநியாயம் தொடர்ந்து நடக்கிறது. அரசே நாட்டாமை செய்ய வசதியாக 90 சதவீத ஆலயங்களில் அறங்காவலர்கள் குழுவே இல்லை. பாரம்பரியமாக ஆலயப் பணிகளில் உள்ள அமைச்சர் இவற்றைப்பற்றியெல்லாம் புரிந்து கொள்ள வேண்டும் 0
0
Reply
Aam Aathmi (Mango Man) - mumbai,இந்தியா
09 ஜூன்,2026 - 11:35 Report Abuse
ஒரு நாவிதர் கத்தியின் பிடி லூசாக இருந்ததால் தொழில் செய்ய சிரமப்பட்டார் ..அவர் முன் கடவுள் தோன்றி என்ன வரம் வேண்டும் கேள் என்றார் .. நாவிதர் கத்தியின் பிடி லூசாக இருப்பதால் சிரமப்படுவதாகவும் அந்த குறையை நீக்கும்படி வேண்டினார் .. இப்போ இருக்கிற மந்திரி அந்த மனா நிலையில் தான் இருக்கிறார் .. ஒரு தடவை வாரணாசி வைஷ்ணோ தேவி உஜ்ஜைன் மஹாகாளேஸ்வர் கோவில்களுக்கு விஜயம் செய்து புனரமைப்பு என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும் .. 0
0
Reply
Anand - chennai,இந்தியா
09 ஜூன்,2026 - 11:11 Report Abuse
அவர் முடிவு யாருக்கு வேண்டும்? கோர்ட் தீர்ப்பளித்துள்ளது அதன்படி தீபம் ஏற்றமுடியுமா, முடியாதா? சும்மா வழ வழ கொழ கொழ வேண்டாம். 0
0
Reply
Rathna - Connecticut,இந்தியா
09 ஜூன்,2026 - 11:05 Report Abuse
திருவண்ணாமலை அண்ணாமலையேஸ்வரர் கோவிலில் பல ஆயிரம் ஆண்டு பழமையான சிற்பங்கள், எடுக்கப்பட்டு மண் தரையில் வைக்கப்பட்டு புழுதி படியும் படி வைக்கப்பட்டு உள்ளது. அந்த மாதிரி சிற்பங்களை நீங்கள் ஒன்று கூட செய்ய முடியாது.
கோவிலின் கட்டிட அமைப்பை தெரியாத களவாணி கூட்டங்களிடம் காண்ட்ராக்ட் விடப்பட்டு உள்ளதால், சிற்பங்களின் மதிப்பு தெரியாத போலி திராவிட ஆட்சியாக உள்ளது. கோவில்களின் பழமையை காக்க வேண்டியது ஆட்சியாளர்களின் கடமை. 0
0
Reply
Sivagiri - chennai,இந்தியா
09 ஜூன்,2026 - 10:02 Report Abuse
0
0
Modisha - Chennai ,இந்தியா
09 ஜூன்,2026 - 11:16Report Abuse
உங்கள் கண்களுக்கு மட்டுமே தெரிந்த திமுகவின் ஹிந்து ஆன்மீக சிறப்புகள் . 0
0
Reply
duruvasar - indraprastham,இந்தியா
09 ஜூன்,2026 - 09:51 Report Abuse
அது சரி இது பற்றியெல்லாம் பேசும் முன்பு யோசிக்க வேண்டும் 0
0
Reply
Sivaraman - chennai,இந்தியா
09 ஜூன்,2026 - 09:02 Report Abuse
.இனி தான் அரசியல் அனுபவம்.கடந்தக் கால ஆதாவது 75 ஆண்டுகளுக்கு முன் இருந்த இகழ்ச்சிக்கு இடம் தராத அரசியல்வாதிகள் மூலம் கற்க நிறைய இருந்தது.இன்றைய அரசியல்வாதிகளிடம் கற்கக் கூடாதது நிறைய உள்ளது.சிந்திந்து பேசுதல் மிக மிக அவசியம். 0
0
Reply
வில்லிபுத்தூரான் - xhennai,இந்தியா
09 ஜூன்,2026 - 08:49 Report Abuse
நீதிமன்றத் தீர்ப்பை நிறைவேற்றுவீர்களா மாட்டீர்களா 0
0
Reply
மேலும் 15 கருத்துக்கள்...
மேலும்
Advertisement
Advertisement