‘முதல்வரின் மாநில இளைஞர் விருது’ தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்
உடுமலை: சமூக சேவையில் ஈடுபடும் இளைஞர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும், ‘முதல்வரின் மாநில இளைஞர் விருது’ வழங்கப்பட்டுவருகிறது.
நடப்பு ஆண்டுக்கான விருது, வரும் 2027, ஆக. 15 ம் தேதி சுதந்திர தின விழாவின்போது, முதல்வர் கையால் வழங்கப்பட உள்ளது. 2025 – 26 நிதியாண்டு வரையிலான காலத்தில், சேவை செய்திருக்க வேண்டும்.
குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தமிழகத்தில் குடியிருப்பவராக இருக்கவேண்டும். சமூக நலனுக்காக, தன்னார்வத்துடன் பணிபுரிந்திருக்கவேண்டும். அவர்களின் தொண்டு, கண்டறியப்படக்கூடியதாகவும், அளவிடக்கூடியவகையில் இருக்கவேண்டும்.
விண்ணப்பதாரர், 2025, ஏப். 1ம் தேதி, 15 முதல் 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்கவேண்டும்; ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலை, கல்லுாரிகளில் பணிபுரிவோர் இந்த விருதுக்கு விண்ணப்பிக்க இயலாது.
தகுதியுள்ளோர், www.sdat.tn.gov.in என்கிற இணையதளத்தில், வரும் ஜூலை, 6ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விபரங்களுக்கு, 0421 2244899 என்கிற எண்ணில் தொடர்புகொள்ளலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும்
-
ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தம்: நெதன்யாகுவை அதிர்ச்சிக்குள்ளாக்கிய டிரம்ப்
-
பொருளாதார மண்டலங்களால் 10 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம் தகவல்
-
திராட்சை ஏற்றுதியாளர் பயிற்சி முகாம்
-
(சென்னை மட்டும்–இந்த செய்தி 10ம் தேதி கோவை சிட்டி சப்ளிமென்டில் சேர்க்கப்பட்டுள்ளது) பிளாஸ்டிக் ஒழித்து நீர்நிலைகளை காக்க வேண்டும் தமிழக அரசிடம் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு
-
வல்லக்கோட்டை முருகன் கோவிலில் திருக்கல்யாண உத்சவம் கோலாகலம்
-
திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா