சாலையில் கிடந்த 2 சவரன் நகை ஒப்படைத்த த.வெ.க., பிரமுகர்

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே சாலையில் கிடந்த 2 சவரன் நகையை த.வெ.க., நிர்வாகி அய்யப்பன் போலீசாரிடம் ஒப்படைத்தார்.

உளுந்துார்பேட்டை அருகே ஆண்டிக்குழி கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யப்பன். த.வெ.க., பிரமுகர். இவர், நேற்று பண்ருட்டியில் இருந்து உளுந்துார்பேட்டை நோக்கி பைக்கில் சென்றார். உளுந்துார்பேட்டை அருகே சாலையில் கிடந்த 2 சவரன் செயினை மீட்டு, கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட செயலாளர் பரணி பாலாஜி, தொகுதி பொறுப்பாளர் மோகன் ஆகியோர் ஆலோசனையின் பேரில், நகையை உளுந்துார்பேட்டை போலீஸ் நிலையத்தில் சப்இன்ஸ்பெக்டர் ராஜசேகரனிடம் ஒப்படைத்தார்.

இதையடுத்து, போலீசார் விசாரித்து அங்குள்ள சி.சி.டி.வி., கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். நகையை தவறவிட்ட கடலுார் மாவட்டம், பண்ருட்டி அருகே வையாபுரிபட்டினத்தைச் சேர்ந்த லட்சுமணன் என்பவரை, போலீஸ் நிலையம் வரவழைத்து நகையை ஒப்படைத்தனர். அய்யப்பனின் நேர்மையான செயலை, போலீசார் பாராட்டினர். 

Advertisement