முகூர்த்தக்கால் நடும் விழா

மானாமதுரை, ஜூன் 13-

மானாமதுரை தல்லாகுளம் தர்மமுனீஸ்வரர் கோயில் திருவிழா வரும் 19ம் தேதி துவங்குகிறது. நேற்று காலை கோயில் முன் முகூர்த்தக்கால் நடப்பட்டு சுவாமிக்கு தீபாராதனை, பூஜை நடந்தது. பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை துவக்கினர். ஏற்பாடுகளை தல்லாகுளம் கோயில் நிர்வாகிகள் விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

Advertisement