மின்வெட்டு ஏற்படுத்த தனி நபர்கள் சிலர் சதி; அமைச்சர் நிர்மல்குமார் குற்றச்சாட்டு
சென்னை: மின்வெட்டு ஏற்படுத்த தனி நபர்கள் சிலர் சதி செய்கின்றனர்.மின்வெட்டு ஏற்படும் இடங்களில் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுவதாக அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.
சென்னையில் அமைச்சர் நிர்மல்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: மின்வெட்டு ஏற்படுத்த தனி நபர்கள் சிலர் சதி செய்கின்றனர் . சில இடங்களில் பியூஸ் கேரியர் திருடப்பட்டு உள்ளது. மின்வேட்டு பிரச்னை உடனுக்குடன் சரி செய்யப்படுகிறது. போராட்டம் நடத்த மக்களை சிலர் தூண்டுகின்றனர்.சூரிய ஒளி மின்சக்தி உற்பத்திக்கு விரைவில் புதிய கொள்கை கொண்டுவரப்படும்.
மின்சாரத்துறை கட்டமைப்பு போதுமானதாக இல்லை. தமிழகத்தில் எங்கெங்கு மின்வெட்டு ஏற்படுகிறது என்பது குறித்து மக்களுக்கு முன்கூட்டியே தெரியப்படுத்தப்படுகிறது. பெரம்பூரில் மின்தடை ஏற்பட்ட 40 நிமிடங்களில் சரி செய்து மின் வினியோகம் சரி செய்யப்பட்டது. ஆனால் இரவு முழுவதும் மின் வினியோகம் இல்லை எவன்பது போல தகவல்களை பரப்பினார்கள்.
மின்தடை ஏற்பட்டால் முடிந்த வரை விரைவாக சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். சமூக ஊடகங்கள் மூலமாக வரும் மின்வினியோகம் தொடர்பான குறைபாடுகள் சரி செய்யப்படுகின்றன. இரவு நேரங்களில் மின் வினியோகம் தொடர்பான குறைகளை சரி செய்ய குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இவ்வாறு அமைச்சர் நிர்மல்குமார் கூறினார்.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர் சந்திப்பு; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
முழு பேட்டியை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
வாசகர் கருத்து (58)
Govi - ,
10 ஜூன்,2026 - 05:38 Report Abuse
இவருக்கு தெரிந்தது அவ்வளவு தான் 0
0
Reply
Mani . V - Singapore,இந்தியா
10 ஜூன்,2026 - 05:07 Report Abuse
மின்வாரியத்தில் நடந்த ஊழலின் பக்கம் அரசின் கவனம் செல்லாமல் இருக்க வேண்டும் என்றால், இப்படி ஊரெல்லாம் மின்தடையை ஏற்படுத்தி மக்களின் கவனத்தை அங்கு திசை திருப்பும் பொழுது, அரசு அந்த பிரச்சினையை சரிசெய்ய முயற்சி செய்யுமே அன்றி, ஊழல் வழக்கை கிடப்பில் போட்டு விடும். டேக் டைவேர்ஷன் ஹீரோ, ஐந்து கட்சி அமாவாசைக்கு ஒரு ராயல் சல்யூட். 0
0
Reply
NACHI - ,
10 ஜூன்,2026 - 04:05 Report Abuse
முன்னாள் அமைச்சர் செந்திலு அணிலு சொன்னார் இப்ப அந்த அணிலு ஆட்சியை பிடித்துவிட்டது ...அணிலோ குரங்கு சொல்லுது....ஹி ஹி ஹி 0
0
Reply
ஸ்ரீனிவாசன் ராமஸ்வாமி - Chennai,இந்தியா
10 ஜூன்,2026 - 02:37 Report Abuse
சட்டம் ஒழுங்கு என்ன ஆயிற்று? 0
0
Reply
Sundar R - ,இந்தியா
10 ஜூன்,2026 - 01:58 Report Abuse
தமிழக மக்களுக்கு திமுகவை அடியோடு பிடிக்காத காரணத்தால், குறிப்பாக திருப்பரங்குன்றம் முருகர் கோயிலில் திருக்கார்த்திகை தீபத்தன்று, திருவிளக்கை ஏற்ற விடாமல் தடுத்த காரணத்தால் தான், சமீபத்திய தேர்தலில் தமிழக மக்கள், மூர்க்கன்களை மட்டுமே உள்ளடக்கிய திமுகவை தகனம் செய்தார்கள்.
தவெக வந்தால் நன்றாக இருக்கும் என்றும், தவெகவினர் நன்மக்களாக இருப்பார்கள் என்று நினைத்து, தவெகவை வெற்றி பெற வைத்தார்கள்.
ஆனால், திருப்பரங்குன்றம் முருகர் கோயில் திருவிளக்கு விஷயத்தில் தவெகவினரும் திமுகவினரைப் போன்று குரூரர்களாக இருப்பதைக் கண்டும், தவெகவினர் தமிழர்களை ஆஸ்ரயிக்க மாட்டார்கள் என்பது என்பதை உணர்ந்த தமிழக மக்கள் "தவெகவின் ஆட்சி எப்போது ஒழியும்?" என்று அன்றாடம் அருகிலுள்ளவர்களோடு அங்கலாய்க்கிறார்கள். 0
0
Reply
Ragupathy - ,
09 ஜூன்,2026 - 22:40 Report Abuse
இது உண்மைதான்... எம்.ஜி.ஆர்.1977 ல் ஆட்சிக்கு வந்த போது,இதே போன்ற வேலையை திருட்டு கழகம் செய்தது..அரசு வேலையில் இருப்பவர்கள் பெரும்பாலும் திருட்டு கழகம் தான்... காரணம் திருட்டு கழகம் லஞ்ச ஊழைக் கண்டு கொள்ளாமல் இருப்பவர்கள்...
இப்போது வேண்டுமென்றே இவர்கள் மின்தடை செய்கின்றனர்...கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் தோற்ற அன்றே மின்தடை செய்தனர்... இவர்களின் சம்பளத்தை பாதியாக குறைக்கவேண்டும்... 0
0
Reply
Raj - Chennai,இந்தியா
09 ஜூன்,2026 - 22:10 Report Abuse
இனியும் எத்தனை நாட்களுக்கு சில நபர் சதி என்று சொல்லுவீர்கள், இந்த குற்றச்சாட்டு உள்ளதால் தான் போன ஆட்சியை புறம் தள்ளினார்கள், எல்லாம் அதிகாரமும் உங்கள் வசம், கடுமையான நடவடிக்கை எடுத்து சரி செய்ய முயற்சி செய்யுங்கள். போன ஆட்சியில் குற்றங்கள் நடந்ததால் தான் மக்கள் உங்களை தேர்ந்தெடுத்தார்கள். மக்கள் உங்களை புறம் தள்ளாமல் பார்த்துக்கொள்ளுங்கள். 0
0
Reply
Venkatesh - Chennai,இந்தியா
09 ஜூன்,2026 - 22:06 Report Abuse
வேடிக்கை முடி பாக்கவா உங்களுக்கு ஓட்டு போட்டானுங்க .....ஆனா ஒன்னு ஓட்டு போட்ட முக்காவாசி பேரு இந்த தற்க்குறி தாயோ....கூட்டத்துக்கா ஓட்டு போட்டோம்னு பொலம்புறானுங்க 0
0
Reply
ராஜ் - ,
09 ஜூன்,2026 - 21:41 Report Abuse
ஆட்சி அதிகாரம் யார் கையில் உள்ளது. கைலாகாத அரசு 0
0
Reply
KRISHNAN R - chennai,இந்தியா
09 ஜூன்,2026 - 21:40 Report Abuse
அடுத்த அணில்,, போல் தெரியுது 0
0
Reply
மேலும் 48 கருத்துக்கள்...
மேலும்
Advertisement
Advertisement