அரசு வழக்கறிஞரை நியமிக்க விண்ணப்பம் வரவேற்பு    

சிவகங்கை:நீதிமன்றங்களில் அரசின் சார்பில் பல்வேறு துறைகளுக்காக வாதாடுவதற்கு அரசு மற்றும் கூடுதல் அரசு வழக்கறிஞர்களை நியமிக்க விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது என கலெக்டர் பொற்கொடி தெரிவித்தார். சிவகங்கை மாவட்ட செஷன்ஸ், கூடுதல் செஷன்ஸ், புதுக்கோட்டை (என்.டி.பி.எஸ்.,) நீதிமன்றம், மகிளா நீதிமன்றம், மனித உரிமை நீதிமன்றம், சார்பு நீதிமன்றம், மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர், கூடுதல் அரசு வழக்கறிஞர், சிறப்பு அரசு வழக்கறிஞர், கவர்மென்ட் பிளீடர், கூடுதல் கவர்மென்ட் பிளீடர் என 18 பேர் அரசு தரப்பில் வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட உள்ளனர்.

இந்த பதவி 3 ஆண்டு காலம் இருக்கும். நீதிமன்றங்களில் அரசு, கூடுதல், சிறப்பு அரசு வழக்கறிஞர்களாக நியமிக்க அனுபவம் உள்ள வழக்கறிஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, 6 போட்டோ, வயது சான்று, கல்வித்தகுதி, வரி உள்ளிட்ட சான்றுகளுடன் ஜூன் 30 மாலை 5:45 மணிக்குள் கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றார். ///

Advertisement