விளம்பர விருப்பம் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மூதாட்டிக்கு இதய அறுவை சிகிச்சை 

கோவை: ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில், ஓராண்டுக்கும் மேலாக மார்புவலி, மூச்சுத்திணறலால் அவதிப்பட்ட 82 வயது மூதாட்டி சேர்ந்தார். பரிசோதனையில், தீவிர ‘கால்சிபிக் பெருநாடி ஸ்டெனோசிஸ்’ நோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதில், இதயத்தின் முக்கிய வால்வில் கால்சியம் படிந்து, ரத்த ஓட்டம் தடைபடும். மூதாட்டியின் வயது மற்றும் பிற காரணங்களால், குறைந்தபட்ச ஊடுருவல் முறையை பயன்படுத்தி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இதில் முழு மார்பையும் பிளக்காமல், நவீன தொழில்நுட்பத்தில் நெஞ்சின் மேல்பகுதியில் ஒரு சிறிய கீறல் போடப்பட்டது. இதன் வழியே ‘போ யாங் பெருநாடி வேர்’ விரிவாக்கம் செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பிறகு, இரண்டாவது நாளே சாதாரண அறைக்கு மாற்றப்பட்டார். உடல்நிலை பூரண குணமடைந்ததால் மூதாட்டி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

Advertisement