ராமேஸ்வரத்தில் ஐந்து மாதமாக மூடப்படாத ஆபத்தான பள்ளம்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் ஐந்து மாதங்களாக மூடப்படாத பள்ளத்தால் மக்களுக்கு விபரீதம் ஏற்படும் அபாயம் உள்ளது.
ராமேஸ்வரம் மேலத்தெருவில் தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள மழைநீர் வாறுகாலுக்குள் காவிரி குடிநீர் குழாய் செல்கிறது. 5 மாதம் முன்பு இக்குழாய் உடைந்து குடிநீர் வீணாகியது. இதனால் ராமேஸ்வரம் நகராட்சி ஊழியர்கள் குழாயை சீரமைத்து குடிநீர் வீணாவதை தடுத்தனர். பணி முடிந்து 5 மாதங்கள் ஆகியும் தோண்டிய பள்ளத்தை மூடாமல் நகராட்சி நிர்வாகம் கிடப்பில் போட்டது.
இதன் வழியாக திருக்கோயில், தனுஷ்கோடி செல்லும் சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் வாகனங்கள், உள்ளூர் டூவீலர் வாசிகள், ஆட்டோக்கள் இப்பள்ளத்தில் இடறி விழுந்து மக்களுக்கு விபரீதம் ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த ஆபத்தான பள்ளத்தை சரிசெய்ய நகராட்சி அதிகாரியிடம் பலமுறை மக்கள் வலியுறுத்தியும் கண்டு கொள்ளவில்லை.
மேலும் இதனை சரி செய்வது நகராட்சி மற்றும் காவிரி குடிநீர் திட்ட நிர்வாகத்தின் பொறுப்பு என இரு நிர்வாக அதிகாரிகளும் மாறி மாறி கூறிக் கொண்டு ஒதுங்குகின்றனர். இதனால் பாதிக்கப்படுவது அப்பாவி மக்கள் தான் என்பதை அதிகாரிகள் உணரவில்லை. எனவே இந்த மரண பள்ளத்தை சீரமைக்க கலெக்டர் சிவகுரு பிரபாகரன் உத்தரவிட வேண்டும்.
–––
மேலும்
-
நொய்யல் குறுக்கே பாலம் பணி விரைவுபடுத்த உத்தரவு
-
விளையாட்டு// தேசிய ஜூடோ சாம்பியன்ஷிப் சென்னை சவுமியாவுக்கு ‘வெள்ளி’
-
விளையாட்டு// மாநில மகளிர் கிரிக்கெட் 221 ரன் வித்தியாசத்தில் செங்கல்பட்டு அணி வெற்றி
-
அயநல்லுார் கிராமத்தில் வீடு, கோவிலில் திருட்டு
-
கூடலுார் ஏரியில் மனித எலும்புக்கூடு போலீசார் விசாரணை
-
சிற்றுந்து -மீது- பேருந்து மோதி 4 பேர் படுகாயம்; பைக் நாசம்