விளம்பர விருப்பம் புதிய தொழில்நுட்ப படைப்புகள் அடங்கிய ‘யுதிஷ்டிரா’ கண்காட்சி 

கோவை: ரத்தினம் தொழில்நுட்ப வளாகத்தில் ‘யுதிஷ்டிரா’ முதலாமாண்டு மாணவர்களின் புதிய படைப்புகள் கண்காட்சி நடந்தது. பயோபியூயல் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி கிருஷ்ணன் கருணாகரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

ரத்தினம்  கல்வி குழுமங்களின் தலைமை வணிக அதிகாரி நாகராஜ் தலைமை வகித்தார். ராக்கெட் இந்தியா நிறுவனத்தின் தலைமைப் பொறியாளர் நவீன் சந்திர கலாதரன், வி.வி.டி.என்., டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் பொறியாளர் அன்சார் சுலைமான், எல்டஎம் நிறுவனத்தின் ஆனந்த் பிரசாத், ஏ.ஐ.சி., ரைசின் துணைத் தலைவர் சூரியராஜ் ஆகியோர் மாணவர்களின் புதிய படைப்புகளை மதிப்பீடு செய்தனர்.

காட்சிப்படுத்தப்பட்ட 218 படைப்புகளில், 17 சிறந்த படைப்புகாக் தேர்வு செய்யப்பட்டு பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முதல்வர் கீதா, ரத்தினம் குளோபல் நிகர்நிலைப் பல்கலையின் பதிவாளர் கிருஷ்ணராஜ், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement