முதியவர் சாவு: போலீசார் விசாரணை
அரியாங்குப்பம்: வீட்டில் தனியாக இருந்த முதியவர் இறந்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பம், கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் கோவிந்தசாமி, 66; இதய நோய் மற்றும் நீரிழிவு நோயிக்கு சிகிச்சை பெற்று வந்தார். இவரது மனைவி வெளியூரில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை அழைக்க சென்ற இவரது மகள் யமுனா வீட்டில் (8ம் தேதி) வந்து பார்த்தபோது, கட்டிலில் கோவிந்தசாமி, காதில் இருந்து ரத்தம் வழிந்த நிலையில் மர்மாக இறந்து கிடந்தார்.
அவரது மகள் புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement