தொழில், கல்வி கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்

கோவை: தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் வாயிலாக  சிறுபான்மையின மக்களுக்கு குறைந்த வட்டியில் தனிநபர் கடன், சுயஉதவிக்குழு கடன், கைவினை கலைஞர்களுக்கான விராசாத் கடன் மற்றும் கல்வி கடன் பெற விண்ணப்பிக்கலாம்.

குடும்ப ஆண்டு வருமான அடிப்படையில் ரூ.20 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை தொழில் கடனும், கைவினை கலைஞர்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடனும் வழங்கப்படுகிறது. தொழிற்கல்வி மற்றும் உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவியர் ரூ.30 லட்சம் வரை கல்விக் கடன் பெறலாம்.

கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், புத்த மதத்தினர், சீக்கியர்கள், ஜெயின் உள்ளிட்ட சிறுபான்மையின மக்கள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம், மாவட்ட சிறுபான்மையினர் அலுவலகம், மாவட்ட கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விண்ணப்பங்களை பெறலாம்.

விண்ணப்பங்களுடன் மதச்சான்றிதழ், வருமானம் அல்லது இருப்பிட சான்று, ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களையும், கல்விக் கடனுக்கு போனபைடு சான்றிதழ், கல்விக் கட்டண ரசீது மற்றும் மதிப்பெண் சான்றிதழ்களை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

Advertisement