பைக்கிலிருந்து விழுந்த பெண் சிகிச்சை பலனின்றி சாவு

கள்ளக்குறிச்சி: கீழ்குப்பம் அருகே பைக்கிலிருந்து கீழே விழுந்து படுகாயமடைந்து சிகிச்சை பெற்ற பெண் இறந்தார்.

சேலம் மாவட்டம், ஆத்துார் அடுத்த நெக்கூரான் தோட்டத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன் மனைவி புனிதவள்ளி, 45; இவரது மகன் அருண்குமார், 25; இவர், தனது தாயுடன் கடந்த 6ம் தேதி பைக்கில் எஸ்.புதுாருக்கு சென்றார். செம்பாக்குறிச்சி வனப்பகுதி அருகே சென்ற போது திடீரென காட்டுபன்றி சாலையின் குறுக்கே வந்ததால், அருண்குமார் நிலை தடுமாறி தாய் புனிதவள்ளியுடன் பைக்கில் இருந்து கீழே விழுந்தார். புனிதவள்ளியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடன், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட புனிதவள்ளி சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் கீழ்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement