மகள் மாயம் : தாய் புகார்

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே திருமணமான தனது மகளை காணவில்லை என தாய் போலீசில் புகார் செய்துள்ளார்.

திருக்கோவிலுார் அடுத்த புதுவேங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ் மனைவி சுபாஷினி, 22; திருமணமாகி ஒன்றரை வருடமாகிறது.

கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்படுவது வழக்கம். இதன் காரணமாக புதுவேங்கூரில் உள்ள தாய் மேரி வீட்டில் சுபாஷினி தங்கியிருந்தார்.

கடந்த 7ம் தேதி மேரி வயலுக்குச் சென்று மாலை 6:00 மணிக்கு வீட்டுக்கு திரும்பியபோது, வீட்டில் இருந்த மகள் காணவில்லை. உறவினர் மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது தாய் மேரி கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

Advertisement