மடத்துக்குளம் சந்தையை இடம் மாற்ற கோரிக்கை

உடுமலை: மடத்துக்குளத்தில் பாதுகாப்பின்றி செயல்படும் வாரச்சந்தையை, இடம் மாற்ற பேரூராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோவை – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், திருப்பூர் மாவட்ட எல்லையில் மடத்துக்குளம் அமைந்துள்ளது. இங்கு வாரம் தோறும் சனிக்கிழமைகளில் சந்தை செயல்பட்டு வருகிறது.

தேசிய நெடுஞ்சாலையில், ரோட்டின் இருபுறமும், பேரூராட்சி அருகில் போதிய பாதுகாப்பின்றி இச்சந்தை செயல்படுகிறது. இதனால் விபத்துகள் ஏற்படும் வாய்ப்புள்ளது.

எனவே, பாதுகாப்பு கருதி சந்தையை இடம் மாற்ற வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனவே, மடத்துக்குளம் பேரூராட்சி அதிகாரிகள், இச்சந்தையை இடம் மாற்றி செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement