தென்மேற்கு பருவமழையால் உயரும் அணைகளின் நீர்மட்டம்

திருநெல்வேலி: தென்மேற்கு பருவமழையால் திருநெல்வேலி, தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

143 அடி உயரமுள்ள பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் (ஜூன் 10) 80 அடியாக இருந்தது. நேற்று 4.40 அடி உயர்ந்து 84.40 அடியை எட்டியது. அணைக்கு வினாடிக்கு 2822 கனஅடி நீர்வரத்து உள்ளது.

சேர்வலாறு அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 103 அடியாக இருந்தது. நேற்று 4 அடி உயர்ந்து 107 அடியை எட்டியது.

118 அடி உயரமுள்ள மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 70 அடியில் இருந்து 72.25 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு 1200 கன அடி நீர்வரத்து உள்ளது. தென்காசி மாவட்டத்தில் கடனாநதி அணை நீர்மட்டம் நேற்று முன்தினம் 48.50 அடியாக இருந்தது. நேற்று 52.80 அடியாக உயர்ந்தது. ராமநதி அணை நீர்மட்டம் 52 அடியில் இருந்து 56 அடியாகவும், கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 45.28 அடியில் இருந்து 47.25 அடியாகவும் உயர்ந்தது. குண்டாறு அணை முழு கொள்ளளவான 36 அடியை எட்டியதால் நீர் நிரம்பி வெளியேறுகிறது.

அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 67.50 அடியில் இருந்து 71அடியாக உயர்ந்துள்ளது.

Advertisement