த.மா.கா., பொதுச்செயலர் த.வெ.க.,வில் இணைகிறார்
சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் பொதுச்செயலர் யுவராஜா, அக்கட்சியிலிருந்து விலகி, தமிழக வெற்றிக் கழகத்தில் சேருகிறார்.
சட்டசபை தேர்தலில், முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க., வெற்றி பெற்று, ஆட்சியை கைப்பற்றியதை தொடர்ந்து, அக்கட்சியில், பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளும் இணைந்து வருகின்றனர். அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோரும் இணைந்துள்ளனர்.
இந்நிலையில், த.மா.கா., பொதுச்செயலர் யுவராஜா, நாளை த.வெ.க., பொதுச்செயலரும் அமைச்சருமான ஆனந்த் முன்னிலையில், த.வெ.க.,வில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
த.மா.கா.,வில் இளைஞரணி தலைவராகவும், அதற்கு முன், தமிழக காங்கிரசில் இளைஞர் காங்கிரஸ் தலைவராகவும் யுவராஜா பதவி வகித்துள்ளார்.
வாசகர் கருத்து (3)
Lakshminarasimhan - Chennai,இந்தியா
12 ஜூன்,2026 - 08:02 Report Abuse
1977 ஜன தா மற்றும் 1980 இந்திரா காங்கிரஸ் கட்சிகளை நினைவில் கொள்ளுங்கள் 1977 ஜன தா மிக உச்சத்தில் இருந்தது அப்போது காங்கிரஸ் மிக தாழ்வில் இருந்தது 1980 காங்கிரஸ் மிக உச்சத்தில் இருக்க ஜன தா மிக தாழ்வில் இருந்தது இங்கே இருந்து அங்கே தாவும் குரங்கு கூட்டம் போல அப்போதைய அரசியல்வாதிகள் இருந்தனர் அதே நிலை தற்போது அரங்கேறுது இதில் என்ன வியப்பு 0
0
Reply
Sivaraman - chennai,இந்தியா
12 ஜூன்,2026 - 07:21 Report Abuse
இவர்களும் பறவைகள் போல் தான்.நீர் நிரம்பியக் குளங்கள் நோக்கிச் செல்வது போன்று தான். பழையக் காங்கிரஸ் இன்று எங்கும் இல்லை.அந்தக் குடும்பத்தினர் பாஜகவில் இருக்கிறார்கள்.. 0
0
Reply
Dominic - mumbai,இந்தியா
12 ஜூன்,2026 - 07:08 Report Abuse
Good future. VO GRATULATION..
Make it with TN parties. Ot with bjp or congress. 0
0
Reply
மேலும்
-
சொல்கிறார்கள் ––––––––– கிராமத்து அசைவ விருந்து சாப்பிட வாங்க!
-
சொல்கிறார்கள் -------––––––––– எங்கள் சமூகம் முன்னேற வேண்டி உழைக்கிறேன்!
-
அசாம் மாநிலத்தில் விமானப்படை விமானம் விபத்தில் சிக்கியது
-
6 நாட்கள் வெளிநாட்டு பயணம்; ஜி7 மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் புறப்பட்டார் மோடி
-
பனையூரில் தொடர்கிறது இணைப்பு விழா; இன்று விஜயதாரணி உள்ளிட்டோர் ஐக்கியம்
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,880 அதிகரிப்பு
Advertisement
Advertisement