புதுக்குளம் நீர்வரத்து ஓடை மூடல் :விவசாயிகள் புகார்
பெரியகுளம்:லட்சுமிபுரம் புதுக்குளம் கண்மாய் நீரோடையை சிலர் சுயநலத்திற்காக பாதை அமைத்து மூடியுள்ளனர். நீர் வளத்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் புதுக்குளம் கண்மாய் 60 ஏக்கர் பரப்பிலானது. மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பெய்யும் மழை, நீர் பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையால் குளத்திற்கு தண்ணீர் வருகிறது. குளத்தின் தேங்கும் நீரால் நூற்றுக்கணக்கான ஏக்கரில் சாகுபடி நடக்கிறது. பல கிணறுகளுக்கு ஊற்று நீர் கிடைக்கிறது. இதனால் ஏராளமான விவசாயிகள் பயனடைகின்றனர். முக்கியத்துவம் வாய்ந்த இக்குளத்தின் நீரோடை பகுதியை சிலர் மண் போட்டு மூடி, சுயநலமாக அவர்களது தோட்டத்திற்கு செல்லும் பாதையாக மாற்றியுள்ளனர். மறுகால் செல்லும் மதகையும் சேதப்படுத்தியுள்ளனர்.
இதனால் மழை காலங்களில் குளத்தில் நீர் நிரம்பும் போது கரைகள் உடையும் நிலை உள்ளது. பெரியகுளம் மஞ்சளாறு வடிநிலக்கோட்ட நீர் வளத்துறையினர், கண்மாயை சீரமைத்தும், சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
--
மேலும்
-
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற அரசு உறுதி அளிக்க வலியுறுத்தல்
-
சீரமைத்த ஒரே ஆண்டில் சேதமான சாலை ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை பாயுமா...?
-
கட்டுமான பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கும்!
-
நீண்ட கால பிரதமர் மோடி; கோவில்களில் மத்திய அமைச்சர்கள் சிறப்பு பூஜை
-
பா.ஜ., பிரமுகர் அலிஷா அப்துல்லா குறித்து ஆபாச பேச்சு; யூடியூபர் முக்தார் கைது
-
கோவை சிறுமி கொலை வழக்கு; 21 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல்