கட்டுமான பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கும்!
சிவகங்கை: 'கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கும்' என்று அமைச்சர் பிரபு தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே நத்தம்பட்டியில் வாளுக்கு வேலி அம்பலத்தின் 225 வது பிறந்தநாள் விழா அரசு விழாவாக நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் பிரபு கலந்து கொண்டு வாளுக்கு வேலி அம்பலத்தின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து விழாவில் பேசிய அமைச்சர், மக்களுக்காக வாழ்ந்த வாளுக்கு வேலி அம்பலம் வீரத்தில் மட்டுமல்ல, அன்பிலும் சிறந்து விளங்கியவர் என புகழாரம் சூட்டினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் டாக்டர் பிரபுவிடம், கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், கட்டுமான பொருட்களின் விலை உயர்வை குறைப்பதற்காக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்பாக இன்னும் சற்று நேரத்தில் அரசின் சார்பில் அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பு வெளியாகும் என தெரிவித்தார்.
மொத்தத்தில் ஒரு தற்குறி ஆட்சி..
நீங்க நல்லா இருப்பிங்க சீக்கிரம் வெளியிடுங்கள் 20 வருட சம்பாத்தியத்தை வைத்து இப்பதான் வீடு கட்டலாம் என முயற்சி எடுத்தேன் ஆனால் கட்டுமான பொருட்கள் விலை உயர்வு அதிர்ச்சி தருகிறது என் போன்ற நடுத்தர மக்களின் சொந்த வீடு கனவு நிறைவேற உதவுங்கள்...