நீண்ட கால பிரதமர் மோடி; கோவில்களில் மத்திய அமைச்சர்கள் சிறப்பு பூஜை

1

புதுடில்லி: வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதற்கான பிரதமர் மோடியின் லட்சியத்தில் ஒட்டுமொத்த நாட்டு மக்களும் இணைய வேண்டும் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வலியுறுத்தியுள்ளார்.

டில்லியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது; இன்று ஒரு சிறப்பான நாள். ஏனென்றால் மோடி நாட்டின் மிக நீண்ட காலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராகப் புதிய சாதனை படைத்துள்ளார். பிரதமர் தொடர்ந்து நாட்டு மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும். வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதற்கான அவரது லட்சியத்தில் ஒட்டுமொத்த நாட்டு மக்களும் அவரோடு இணைய வேண்டும்.

என்டிஏ அரசு நாட்டைப் பல துறைகளை வளர்ச்சியின் பாதையில் கொண்டு சென்றுள்ளது. உள்கட்டமைப்பு, சிறந்த நிர்வாகம், ஏழைகளுக்கான நலத்திட்டங்கள், பெண்களுக்கு அதிகாரமளித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளால் நாட்டின் மூலை முடுக்கெங்கும் இந்த ஆட்சியின் மீது மக்கள் மிகப்பெரிய நம்பிக்கையையும், மதிப்பையும் வைத்துள்ளனர், என்று அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், ஜிதேந்தர் சிங் ஆகியோர் கோவில்களில் சிறப்பு பிரார்த்தனை நடத்தினர்.

Advertisement