கோவை சிறுமி கொலை வழக்கு; 21 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல்

1


கோவை: கோவை, சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் கோர்ட்டில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

கோவை சூலுார் அருகே, 10 வயது சிறுமி, கடந்த மாதம் 21ம் தேதி கடத்தப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இவ்வழக்கில், நாகப்பட்டினத்தை சேர்ந்த கார்த்திக், 33, உடந்தையாக இருந்த தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த மோகன், 31, ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடம் 3 நாள் விசாரணை முடிந்து போக்சோ நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்ப்படுத்தினர். இருவரையும் வரும் ஜூன் 12ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில் இன்று இந்த வழக்கில் கோர்ட்டில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

21 நாட்களில் விசராணை முடிந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இருவருக்கும் அதிகபட்ச தண்டனையை பெற்ற தர போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Advertisement