அரசுக்கு தபால் அட்டை அனுப்பிய அலுவலர்கள்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் சார்பில் கடந்த ஆட்சியில் கொண்டு வந்துள்ள புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி முதல்வர் விஜய்க்கு தபால் அட்டையில் கோரிக்கையை  அரசு அலுவலர்கள் அனுப்பி வருகின்றனர்.

திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் மாநில செயலாளர் விஜயகுமார் தலைமையில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி தபால் அட்டையில் கோரிக்கையை  அனுப்பினர்.

சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செய்யதலி ஹவாமா உட்பட 50 அலுவலர்கள் பங்கேற்றனர்.  இதுபோன்று பிற ஊராட்சி ஒன்றியங்கள்,  அரசு அலுவலகங்களிலும்  சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் முதல்வருக்கு கோரிக்கை அட்டையை அனுப்பி வருகின்றனர்.––––––

Advertisement