கலெக்டர் ஆபீசில் வாலிபர் தர்ணா
தேனி, ஜூன் 10-திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு கண்ணாபட்டி பொன்மனச்செல்வன் 36. இவர் கலெக்டர் அலுவலகத்தில் போர்டிகோவில் கலெக்டர் கார் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். அவரது மனுவில், ‘அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் ஒப்பந்த பணியாளராக பணிபுரிந்தேன். கடந்த மாதம் வார்டு 600ல் எலி தொல்லை வீடியோ வைரல் ஆனது. அப்போது கலெக்டர் ஆய்விற்காக வந்தார். நான் தகவல் தெரிவிக்க வார்டு மேற்பார்வையாருக்கு அலைபேசியில் தொடர்பு கொண்டேன். அவர் பதில் அளிக்கவில்லை. இந்நிலையில் கலெக்டர் கூறியதாக என்னை மருத்துவக்கல்லுாரி நிர்வாகத்தினர் பணி நீக்கம் செய்தனர். எனக்கு மீண்டும் பணி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்,’ என்றிருந்தது. போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி திருப்பி அனுப்பினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement