இதே நாளில் அன்று
ஜூன் 13:
தஞ்சாவூர் மாவட்டம், திருநாகேஸ்வரத்தில், கந்தசாமி முதலியார் -- அமிர்தம் அம்மையார் தம்பதியின் மகனாக, 1917, ஜனவரி 14ல் பிறந்தவர் க.வெள்ளைவாரணனார்.
இவர், திருப்பெருந்துறை மாணிக்கவாசகர் தேவார பாடசாலையில், திருமுறைகளை இசையுடன் பாட கற்றார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில், வித்வான் படிப்பை முடித்தார்.
தஞ்சை கரந்தை தமிழ் கல்லுாரி, அண்ணாமலை பல்கலையில் விரிவுரையாளராக பணியாற்றினார். ஓய்வுக்கு பின், மதுரை காமராஜர் பல்கலையில் சிறப்பு பேராசிரியராகவும், தமிழ் துறை தலைவராகவும் பணியாற்றினார்.
இவர் எழுதிய, 'பன்னிரு திருமுறை வரலாறு, தில்லை பெருங்கோவில் வரலாறு, தேவார அருள்முறை திரட்டுரை, இசைத்தமிழ், சங்ககால தமிழ் மக்கள்' உள்ளிட்ட நுால்கள் அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளன.
'கலைமாமணி, சித்தாந்த செம்மல்' உள்ளிட்ட விருதுகளை பெற்ற இவர், தன் 71வது வயதில், 1988ல் இதே நாளில் மறைந்தார்.
இவரது நினைவு தினம் இன்று!
மேலும்
-
லஞ்சம் கேட்டதால் பறிபோனது ரூ.3.3 லட்சம் கோடி முதலீடு; திமுக ஆட்சி மீது அமைச்சர் கீர்த்தனா திடுக்!
-
திருப்பரங்குன்றம் வழக்கில் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
-
பிலிப்பைன்ஸ் பள்ளியில் துப்பாக்கிச்சூடு; மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு
-
தண்ணீர் பாட்டில் கொடுத்தால் வீசி எறிவார்கள்; சட்டசபையில் சிரிப்பலை
-
சொல்கிறார்கள் –––––––––– சேர்ந்து வாழாவிட்டாலும் சிறந்த பெற்றோராக இருக்கணும்!
-
சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு