'நல்லவேளை தமிழகம் தப்பிச்சது!'
சென்னை, அம்பத்துாரில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ பங்கேற்றார்.
விழாவில் அவர் பேசுகையில், 'நாங்கள் தமிழக வெற்றிக் கழக அமைச்சரவையில் இடம்பெறவில்லை. ஆயினும், நாங்கள் கூறிய ஒரு சில கருத்துகளுக்காக, கூட்டணி கட்சியினர் எங்கள் மீது விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.
'பதிலுக்கு எங்கள் தம்பிகள் அம்புகளை ஏவ தயாராக உள்ளனர்; ஆனால், எனக்காக அமைதி காக்கின்றனர். நான் பிரசாரம் செய்த 34 தொகுதிகளில், 24ல் தி.மு.க., வென்றுள்ளது. தற்போது விஜய்க்கு வரும் கூட்டத்தை விட, 1994ம் ஆண்டு ம.தி.மு.க.,வை துவங்கிய போது எனக்கு அதிக கூட்டம் வந்தது. அப்போது சமூக வலைதளங்கள் இல்லாததால், அது மக்களிடம் சென்று சேரவில்லை' என்றார்.
இதைக் கேட்ட ஒருவர், 'அப்ப மட்டும் சமூக வலைதளங்கள் இருந்திருந்தால், வைகோ முதல்வராகியிருப்பாரு...' எனக் கூற, அருகில் இருந்தவர், 'நல்லவேளை, தமிழகம் தப்பிச்சது...' என்ற படியே அங்கிருந்து கிளம்பினார்.
சிரிப்பாய் சிரிக்குது வைகோ புலம்பல்.
கோல்மால் புறம் கொத்தடிமையை யெல்லாம் மனுஷனாக நினைத்து பொது இடத்திற்கு கூப்பிட்டு பேச வைப்பது அசிங்கத்தை நடு வீட்டில் வைப்பதற்கு சமம்.
தண்ணீர். கண்ட. இடமெல்லாம். தாவிக்கொண்டு. போய், கட்சியையும் கரைத்துவிட்டு. ஊடகங்கள், இணையங்கள். என்று. ‘பழைய. நினைப்புடா’. கூரையைப் பார்த்துக்கொண்டு. என்று. இனி. உங்கள் நிலைமேலும்
-
ஏப்ரல் கட்டணமே செலுத்தலாம்
-
தென் ஆப்ரிக்காவுக்கான துணை துாதராக கோவேந்தன் பொறுப்பேற்பு
-
பஞ்சாயத்து வாக்காளர் பட்டியலில் ‘மாஜி’ அமைச்சர் பெயர் ‘மிஸ்ஸிங்’
-
கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத்தில் சேர்ந்து நிதியுதவி பெற அழைப்பு
-
ஜமாபந்தியில் பெறப்படும் மனுக்களுக்கு உடனடி தீர்வு காண கலெக்டர் அறிவுறுத்தல்
-
பட விளக்க மாற்றம்